ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தாலி சென்டிமென்ட் போதும்.. வெற்றிக்கு தண்டனை வாங்கி தர போகும் அபிநயா!

தாலி சென்டிமென்ட் போதும்.. வெற்றிக்கு தண்டனை வாங்கி தர போகும் அபிநயா!

அபிநயாவின் இந்த முடிவு கண்டிப்பாக சீரியலில் அதிரடியான திருப்பத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அபிநயாவின் இந்த முடிவு கண்டிப்பாக சீரியலில் அதிரடியான திருப்பத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அபிநயாவின் இந்த முடிவு கண்டிப்பாக சீரியலில் அதிரடியான திருப்பத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தனை நாள் வரை தாலி சென்டிமென்ட், கணவர் என்றெல்லாம் பேசி கொண்டிருந்த அபிநயா தற்போது வெற்றியை போலீசாரிடம் மாட்டிவிட்டு தண்டனை வாங்கி கொடுக்க முடிவு எடுத்து விட்டார்.

  விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட தென்றல் வந்து என்னை தொடும் பலரின் உள்ளம் கவர்ந்த சீரியலாக மறிவிட்டது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் இந்த சீரியலை அதிகம் விரும்பி பார்க்கின்றனர். அதற்கு காரணம், வெற்றி - அபிநயா லவ் டிராக் தான். டாம் அண்ட் ஜெர்ரி போல் இவர்கள் இருவரும் எப்போதுமே அடித்து கொள்வார்கள். விருப்பமே இல்லை என்றாலும் ஊருக்காக ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்த சீரியலின் அறிமுக புரமோவே சர்ச்சையில் வெடித்தது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்.

  இதையும் படிங்க.. பிக் பாஸ் 5ல் சம்பளமே வேண்டாம் என்ற போட்டியாளர்! ஆனாலும் கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

  இந்நிலையில் நெகட்டிவ் விமர்சனங்களுடன் சீரியல் ஒளிப்பரப்பாக தொடங்கியது.ஆனால் போக போக திரைக்கதை சூடுப்பிடித்து இப்போது இந்த சீரியலின் புரமோ ட்ரெண்டிங்கில் இடம் பிடிக்கும் அளவுக்கு கதைக்களம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

  விருப்பமில்லாமல், அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட தாலியை உண்மையாக மதித்து வாழும் அபிநயா வெளிநாட்டில் சென்று படித்தவர். சீரியலின் நாயகனான வெற்றியை திருத்தி அவனுடன் சேர்ந்து வாழ முடிவு எடுக்கிறார் நாயகி அபிநயா.

  தனது அப்பாவை எதிர்த்து கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டார். ஆனால் வெற்றியின் வீட்டில் அபியை யாரும் சேர்த்து கொள்ளவில்லை. இதனால் வீட்டு வாசலில் நின்று தர்ணா செய்தவர் ஒருவழியாக வீட்டுக்குள் சென்றார். அப்படியே படி படியாக மொத்த குடும்பமும் அபியை ஏற்றுக் கொண்டு விட்டனர். வெற்றி மட்டும் இன்னும் அபியை ஏற்றுக் கொண்டு சேர்ந்து வாழவில்லை.இதற்கிடையில் கெட்டவர்களை அழிக்க நல்லவர்களுக்காக ரவுடிசம் செய்கிறார் வெற்றி. இவரை திருத்தி நல்லவராக மாற்றி சேர்ந்து வாழுவேன் என சபதம் எடுக்கிறார். அதன்படி தான் தற்போது வரை வாழ்ந்து வருகிறார்.

  ' isDesktop="true" id="676251" youtubeid="tPeDAam2PaY" category="television">

  இந்நிலையில் வெற்றிக்கு தெரிந்தவரின் பள்ளி படிக்கும் சிறுமியை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்கிறார். அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் தெரிந்து வெற்றிக்கு அடக்க முடியாத அளவுக்கு கோபம் வருகிறது. இந்த கோபத்தோடு வேகமாக சென்றவர் அந்த நபரை ரோட்டில் அடித்து பிரட்டி எடுக்கிறார். இதை அபிநயாவும் பார்த்து விடுகிறார். பின்பு வெற்றியை கைது செய்ய வீட்டுக்கு போலீசார் வருகின்றனர். அவர்களுக்கு வெற்றி தான் அந்த நபரை அடித்தது என கண்ணில் பார்த்த சாட்சி தேவைப்படுகிறது. அப்போது வெற்றிக்கு எதிராக சாட்சி சொல்ல அபிநயா முடிவு எடுக்கிறார்.

  இதையும் படிங்க.. எல்லோரையும் ஓட விடுறேன்.. பிக் பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக ஜூலி!

  இது மொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சியை தருகிறது. அபிநயாவின் இந்த முடிவு கண்டிப்பாக சீரியலில் அதிரடியான திருப்பத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv