• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தாலி சென்டிமென்ட் எல்லாம் ஓவர்.. வீட்டுக்கு கிளம்புகிறார் அபிநயா!

தாலி சென்டிமென்ட் எல்லாம் ஓவர்.. வீட்டுக்கு கிளம்புகிறார் அபிநயா!

தென்றல் வந்து என்னை தொடும்

தென்றல் வந்து என்னை தொடும்

வீட்டு வாசலில் நின்று தர்ணா செய்தவர் ஒருவழியாக வீட்டுக்குள் சென்றார்.

  • Share this:
    விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இத்தனை நாட்களாக வெற்றி வீட்டில் தங்கியிருந்த அபிநயா இன்று வீட்டுக்கு கிளம்புகிறார்.

    ஆரம்பமே சர்ச்சை என்பது போல் இந்த சீரியல் முதல் புரமோவிலே பிரச்சனை வெடித்தது, ரவுடி வெற்றி தனது திமிரால் அபிநயாவுக்கு கோயிலில் வைத்து தாலி கட்ட, அந்த தாலி சென்டிமென்ட்டை வைத்து அபிநயா தனது கல்யாணத்தை நிறுத்திவிட்டு வெற்றியுடன் சேர்ந்து வாழ முடிவு எடுப்பார். தமிழ்நாட்டில் தாலி சென்டிமென்டுக்கு எப்போதுமே மதிப்பு உண்டு. அந்த கருத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த புரமோ பெரும் சர்ச்சையை சந்தித்திருந்தது. இந்நிலையில் தற்போது சீரியல் பரபரப்பான கதைக்களத்துடன் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. வெற்றியை திருத்தி அவனுடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்த அபிநயா அப்பாவை எதிர்த்து கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டார். ஆனால் வெற்றியின் வீட்டில் அபியை யாரும் சேர்த்து கொள்ளவில்லை. இதனால் வீட்டு வாசலில் நின்று தர்ணா செய்தவர் ஒருவழியாக வீட்டுக்குள் சென்றார்.

    ஆனாலும் அபிநயாவிடம் வீட்டில் யாரும் பேசவில்லை. கொசுவில் படுத்துக் கொண்டு சரியாக சாப்பிடாமல் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டு அந்த வீட்டிலே இருக்கிறார். வெற்றிக்கு அபியை பார்க்க பாவமாக இருந்தாலும், அவளை ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் தவிக்கிறான். காரணம், ஏற்கெனவே வெற்றி வேலைக்கு செல்லாமல் வீட்டில் அப்பாவிடம் திட்டு வாங்கி கொண்டு ஊர் சுற்றி வருகிறான். இதனால் அபிநாயவுக்கு வெற்றியின் அப்பாவே அட்வைஸ் செய்கிறார். ஒருமுறை அபிநயாவின் அப்பாவே வீட்டுக்கு வந்து அழைத்த போதும் அபி செல்ல மறுக்கிறாள். இது எல்லாத்துக்கும் காரணமாக அபி சொல்வது தாலி கட்டியவர் உடன் தான் நான் வாழ்வேன் என்று. இதனால் யாரிடமும் பதில் இல்லாமல் தவிக்கிறார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், வீட்டில் சமைத்து சாப்பிட்ட அபியை, வெற்றியின் அப்பா பயங்கரமாக திட்டுகிறார். இதனால் மனமுடைந்த அபி தனது வீட்டுக்கு செல்ல முடிவு எடுக்கிறாள். இதனை வெற்றியிடம் போய் சொல்கிறாள். சந்தோஷத்தில் தொல்லை விட்டது என்று வெற்றி குத்தாட்டம் போடுகிறான். இதுக்குறித்த புரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.



    அபி, வெற்றியிடம் வீட்டுக்கு கிளம்புவதாக சொல்ல, வெற்றி மறுபடியும் சொல்லு, மறுபடியும் சொல்லுன்னு அபியை வெறுப்பேற்றி, செல்ஃபோனில் தனுஷ் பாடலை பிளே செய்து குத்தாட்டம் ஆடுகிறான். அபி வெற்றியை பார்த்து பயங்கரமாக முறைக்கிறாள். இதுக்குறித்த எபிசோட் இன்று ஒளிப்பரப்பாகவுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: