Home /News /entertainment /

’தென்றல் வந்து என்னை தொடும்’ வெற்றியின் செல்ல மகனை பார்த்து இருக்கீங்களா?

’தென்றல் வந்து என்னை தொடும்’ வெற்றியின் செல்ல மகனை பார்த்து இருக்கீங்களா?

வினோத் பாபு

வினோத் பாபு

மனைவி சிந்து மற்றும் மகன் வின்சனுடன் வினோத் பாபு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ஹீரோ நடிகர் வினோத் பாபு தனது மகனுடன் கொண்டாடிய கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்ட படங்கள் இணையத்தில் லைக்ஸ்களை வாரி குவித்துள்ளன.

    விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்ற வினோத் பாபு இப்போது சின்னத்திரை நடிகராக வளர்ந்து நிற்கிறார். இவரின் கரண்ட் சீரியலான தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருக்கிறது. இதில் இவருக்கு ஜோடியாக பவித்ரா நடிக்கிறார். அபி - வெற்றி ஜோடி இணையத்தில் நிறைய ரசிகர்களை பெற்றுள்ளது. இதற்கு முன்பு வினோத் பாபு விஜய் டிவியில் ஒளிபரப்பான ’சுந்தரி நீயும், சுந்தரன் நானும்’ தொடரில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். அடுத்ததாக, ’தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலில் கதாநாயகனாக அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.



    பாக்கியலட்சுமி அமிர்தா சொன்ன குட் நியூஸ்!

    இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது. இது ஒரு காதல் திருமணம் ஆகும். கல்யாணம் முடிந்த கையோடு வினோத் - சிந்து ஜோடி மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பலருக்கும் சிந்துவை மிகவும் பிடித்து போனது. மிகவும் கலகலப்பான சிந்து, வினோத்தை கலாய்த்து அரங்கத்தை அதிர வைப்பார். கடந்த ஆண்டு இந்த ஜோடிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.



     




    View this post on Instagram





     

    A post shared by Vinothbabu (@vinothbabu_m)






    குழந்தை பிறந்த தருணத்தை வினோத் இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தார். அந்த பதிவில், " குழந்தை வின்சின் வந்துவிட்டான்.  அனைவரின் அன்புக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனது மகனுடன் வினோத் பாபு, கிருஷ்ண ஜெயந்தி நாளை கொண்டாடி இருக்கிறார்.




    மனைவி சிந்து மற்றும் மகன் வின்சனுடன் வினோத் பாபு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியாகியுள்ளன. எங்கள் வீட்டு கிருஷ்ணனை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன் என கேப்ஷனுடன் வினோத் பாபு அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பலருக்கும் குழந்தை வளர்ந்து விட்டான், அழகிய குடும்பம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி