சீரியல்களின் டைட்டில் படத்தின் டைட்டிலில் இருந்து எடுக்கப்பட்ட காலம் போய், இப்போது சீரியலின் கதையே கிட்டத்தட்ட படத்தின் கதையை தழுவி எடுப்பது போல நிலைமை வந்து விட்டது. ஆனால் அதையும் ரசிகர்கள் ரசிக்க தான் செய்கிறார்கள். ஒருசில நேரத்தில் தான் அது வொர்க்கவுட் ஆகாமல் ட்ரோலுக்கு ஆளாகி விடுகிறது. அப்படித்தான் சமீபத்தில் நெட்டிசன்களின் ட்ரோலுக்கு ஆளாகி இருக்கிறது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியல்.
ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் இருந்து கொஞ்சம் சீன்களை எடுத்து அதை பட்டி டிங்கரிங் பார்த்து சீரியல் கதையில் சேர்த்து எடுப்பது தற்போது ட்ரெண்டாகிவிட்ட விஷயம் தான். அந்த வகையில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் சூர்யாவின்
ஆறு படத்தில் இடம்பெறும் சீன்கள் தூவப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். காரணம், சூர்யாவின் ஆறு படத்திலும் சூர்யா, த்ரிஷாவுக்கு ஒரு செயினை போடுவார். அதை த்ரிஷா தாலி என சொல்லி, சென்டிமெண்டாக அவரே வைத்திருப்பார். சூர்யா ஆறு படத்தில் படிக்காத ரவுடி. வில்லனை அண்ணன், அண்ணன் என சொல்லி அவருக்காவே எல்லாமே செய்வார்.
இதையும் படிங்க.. டிடி அக்கா பிரியதர்ஷினிக்கு ஷூட்டிங் போது நடந்த சோகம்!
அதே போல தான் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் பூங்காவணத்திடம் வெற்றி அடியாளாக வேலை செய்கிறார். ஆனால் வெற்றி படித்த ரவுடி. இப்போது, வெற்றியும் அபியும் பிரிந்து இருக்கிறார்கள். வெற்றிக்கு இன்னொரு பெண்ணுடன் கல்யாணமும் நடக்க போகிறது. இப்படி ஒருபக்கம் கதை விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருந்தாலும் ஆறு படத்தின் தழுவல் தான் இந்த சீரியல் என்ற மீம்ஸூம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நெட்டின்களும் இதை வைரலாகி வருகின்றன. இந்த சர்ச்சை முதன்முறையா? என்றால் இல்லை.
ஏற்கெனவே இந்த சீரியலில் வந்த சண்டை காட்சி தம்பி படத்தில் வரும் சீன் போலவே இருந்தது என நெட்டிசன்கள் ட்ரொல் செய்து இருந்தனர். இப்போது மொத்தமாகவே ஆறு படத்தின் கதை போல் உள்ளது எனவும் கலாய்த்து வருகின்றனர். ஆனாலும் சீரியலில் வெற்றி - அபிநயா கெமிஸ்ட்ரி , வெற்றிக்கு தனி குடும்பம், அபிநயாவுக்கு படித்த பட்டதாரி குடும்பம் என சின்ன சின்ன மாற்றங்கள் சீரியலுக்கு பெரும் பலமாக அமைந்து உள்ளது. இதனால் சீரியல் டி.ஆர்.பியில் கலக்கி வருகிறது.
இதையும் படிங்க.. முத்தழகுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. பூமி செய்த துரோகம்!
இந்த ட்ரோலை பார்த்த சூர்யா ரசிகர்கள், இது என்னடா சூர்யா படத்திற்கு வந்த சோதனை எனவும் புலம்பி தள்ளுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.