• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அதே லவ்.. இத்தனை வருஷம் ஆகியும் தென்றல் தமிழ் மாறவே இல்லை!

அதே லவ்.. இத்தனை வருஷம் ஆகியும் தென்றல் தமிழ் மாறவே இல்லை!

தமிழும் சரஸ்வதியும்

தமிழும் சரஸ்வதியும்

13 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிப்பரப்பான தென்றல் சீரியலை ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்து இருக்க மாட்டார்கள்.

  • Share this:
    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தென்றல் சீரியல் போலவே தனது காதல் காட்சிகளால் ரசிகர்களை அசர வைத்துள்ளார் நடிகர் தீபக்.

    விஜய் டிவியில் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நெடுந்தொடராக பயணித்து வருகிறது. இதில் தமிழாக நடிக்கும் நடிகர் தீபக் நீண்ட காலத்திற்கு பிறகு சின்னத்திரையில் கம்பேக் கொடுத்துள்ளார். சீரியல் குறித்த அறிமுக புரமோவே மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது. இந்நிலையில் விஜய் டிவி தீபக்கை நம்பி தமிழும் சரவஸ்தியும் சீரியலை கொடுத்தது. கொடுத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி கொண்டுள்ளதீபக் சீரியலில் தமிழாக கலக்கி வருகிறார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிப்பரப்பான தென்றல் சீரியலை ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்து இருக்க மாட்டார்கள்.

    இந்த சீரியலில் தமிழ் - துளசி காதல் காட்சிகள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்த ரீல் ஜோடி சின்னத்திரையில் சூப்பர் டூப்பர் ஜோடியாக வலம் வந்தது.600 எபிசோடுகளை கடந்து ஒளிப்பரப்பான இந்த தொடர் சின்னத்திரை வெற்றி சீரியல்கள் பட்டியலில் உள்ளது. இந்த சீரியலுக்கு பிறகு இந்த ஜோடி சின்னத்திரையில் இணையவில்லை. இந்நிலையில் தற்போது தீபக், விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வருகிறார்.

    பிரியங்காவ பிடிக்கும்.. ஆனா அவங்க சொன்ன கதை பிடிக்கல!

    அதிகம் படிக்காத தமிழ், நன்றாக படித்த பெண்ணை கல்யாணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் விதி அவருக்கு சரஸ்வதியை அறிமுகப்படுத்துகிறது. சரஸ்வதி 12 வது பாஸ் செய்யவே 10 முறை அட்டம்ட் எழுதுபவர். தடைகளை வென்று இவர்கள் இருவரும் இணைவதே சீரியலில் கதை. இருவரும் காதலிப்பது உறுதியானாலும் இதுவரை இருவரும் முறையாக தங்கள் காதலை கூறவில்லை. இந்நிலையில் இதுக் குறித்த புரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது. எந்த கோயிலில் வைத்து தமிழ், சரஸ்வதியை சந்தித்தாரோ அதே கோவிலில் தனது காதலை சொல்கிறார். சரஸ்வதியும் ஓகே சொல்கிறார்.



    இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தென்றல் தீபக் மாறவில்லை, காதல் காட்சியில் அதே தமிழை ஞாபகப்படுத்தி கவர்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: