• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய் டிவியை நம்பிய தீபக்... தமிழும் சரஸ்வதியும் கற்றுக்கொடுத்த பாடம்!

11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய் டிவியை நம்பிய தீபக்... தமிழும் சரஸ்வதியும் கற்றுக்கொடுத்த பாடம்!

தமிழும் சரஸ்வதியும் தீபக்

தமிழும் சரஸ்வதியும் தீபக்

படம் சரியாக போகவில்லை. இதனால் சில ஆண்டுகள் மீடியாவை விட்டு விலகி இருந்தார்.

  • Share this:
    11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் டிவியில் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கும் தீபக்கின் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நல்ல பெயரை வாங்கி தந்துள்ளது.

    விஜய் டிவியில் சில முகங்களை எப்பவும் மறக்க முடியாது. அந்த லிஸ்டில் நடிகர் தீபக்கும் ஒருவர். ஜோடி நம்பர் 1 முதல் சீசனில் டிடியுடன் தீபக்கின் ஆங்கரிங் பயணம் பயங்கர ரகளையானது. குறிப்பாக இவர்களை ஹாட்ரிக் ஆங்கர்கள் என்றெல்லாம் அழைப்பார்கள். தொடர்ந்து 3 சீசன்களை இவர்கள் இருவர் தான் இணைந்து வழங்கினர். அதன் பின்பு தான் டிடி போட்டியாளராக கலந்து கொள்ள செல்ல, டிடியின் அக்கா பி.டி இந்த நிகழ்ச்சியை தீபக்குடன் இணைந்து வழங்கினார். விஜய் டிவியில் கிடைத்த மாபெரும் வரவேற்புடன் சின்னத்திரையில் சீரியலில் நுழைந்தார் தீபக்.

    பந்தம், கீதாஞ்சலி, மனைவி, செல்வி, பந்தம், அரசி, திருமதி செல்வம், ரோஜா கூட்டம் என எண்ணற்ற சீரியல்களில் நடித்தார். அதன் பின்பு தென்றல் சீரியலில் நடிகை ஸ்ருதியுடன் லீட் ரோலில் நடித்தார். சன் டிவியில் ஒளிப்பரப்பான அந்த சீரியல் சூப்பர் டூப்பர் ஹிட். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரெட் சீரியல் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு ஸ்ருதிக்கும் தீபக்கும் அந்த சீரியல் பெயர் வாங்கி கொடுத்தது. அதன் பின்பு ஜீ தமிழ் சேனலில் சில ஆண்டுகள் ஆங்கராக இருந்து வந்தார். இதற்கு நடுவில் வெள்ளித்திரையில் ’ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல” படத்திலும் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை. இதனால் சில ஆண்டுகள் மீடியாவை விட்டு விலகி இருந்தார்.

     

    மனைவி மற்றும் மகனுடன் தீபக்


    அவ்வப்போது தனது குடும்பத்தினருடன் தீபக் சோஷியல் மீடியாவில் புகைப்படங்களை வெளியிடும் போது அவரிடம் கம் பேக் பற்றி கேட்காத ஆடியன்ஸே இல்லை. இந்த நேரத்தில் மீண்டும் விஜய் டிவியை நம்பி தீபக் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் லீட் ரோலில் நடித்து கம் பேக் கொடுத்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    11 வருடத்திற்கு பிறகு தீபக்கின் இந்த நடிப்பு முடிவு வெற்றியை பரிசாக தந்துள்ளது. இந்த சீரியல் ஒளிப்பரப்ப தொடங்கிய முதலே நல்ல ரேடிங்கை பிடித்திருந்தது. இந்நிலையில், இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது. இத்தனை ஆண்டுகள் கழித்து தீபக்கின் துள்ளல் நடிப்பில் எந்த குறையும் இல்லை என்கின்றனர் அவரின் ரசிகர்கள். மீண்டும் தீபக்குக்கு கைக்கொடுள்ளது விஜய் டிவி.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: