• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாண்டியன் ஸ்டோர்ஸில் என்ன நடக்கிறது? பிரிகிறதா குடும்பம்!

பாண்டியன் ஸ்டோர்ஸில் என்ன நடக்கிறது? பிரிகிறதா குடும்பம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் புதிய கடை கட்டும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.

  • Share this:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே லேசாக புகைச்சல் உருவாகியுள்ளது.

இப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழ் சீரியல்களில் டாப் 3ல் இருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில் நாள்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கண்ணன் ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டதில் இருந்தே, பாசமலர்களாக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் புகைச்சல்கள் உருவாகத் தொடங்கியது. அம்மா இறந்ததை கண்ணனிடம் சொல்லாத குடும்பத்தினர், அவன் திரும்பி வருவதற்குள் அடக்கம் செய்துவிட்டனர். இதனால் ஒட்டுமொத்த குடும்பத்தினர் மீதே கண்ணன் அதிருப்தியில் இருக்கிறான்.

இந்த நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் புதிய கடை கட்டும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. மூத்த அண்ணன் மூர்த்தி, இரண்டாவது அண்ணன் ஜீவா ஆகியோர் கனிசமான பங்களிப்பில் கடை வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அண்ணி தனம் மற்றும் மீனா ஆகியோர் தங்களிடம் இருந்த நகைகளை கொடுத்துவிட்டனர். ஆனால், கதிரிடமும், முல்லையிடமும் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. இதனால், கதிர் கடை வேலையை அருகில் இருந்தே பார்த்துக் கொண்டு, கடை வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார்.



இந்த நேரத்தில் குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது மூர்த்தி பணம் கொடுக்கல் வாங்கல் குறித்து பேசுகிறார். அப்போது, பணம் கொடுக்க வேண்டியவர்களுக்கு காசை முறையாக கட்டியாச்சா? என மூர்த்தி கதிரிடம் கேட்கும்போது, வீட்டு வேலைகளில் முழுமையாக கவனம் செலுத்தியதால் மறந்து விட்டேன், எப்படி மறந்தேன் என எனக்கே தெரியவில்லை என கூறுகிறார். அப்போது அருகில் இருக்கும் ஜீவா, ஏன்டா கடை கட்டும் வேலை செய்யும் இடத்தில் நீ சும்மா தான இருக்கிற, அப்புறம் இதைக் கூட செய்யாம வேற என்ன வேலை உனக்கு என கேட்கிறார்.

ஜீவாவிடம் இருந்து இந்த கேள்வியை எதிர்பார்க்காத கதிர் தர்மசங்கடமாக தலையை குணிகிறார். ஆனால், முல்லைக்கு கோபம் சுர்ரென்று வந்துவிடுகிறது. ஆவேசமாக எழும் முல்லை,
"அப்படி சொல்லாதீங்க மாமா, அவர் ஒன்னும் சும்மா இல்லை. கடை கட்டும் வேலை செய்ய இடத்தில் அவர்களோட இணைந்து தேவையான கட்டட வேலைகளை கதிர் செய்து கொண்டிருக்கிறார்" கூறுகிறார். முல்லை அவ்வாறு கூறியதும் அண்ணன் மூர்த்தி, ஜீவா, அண்ணிகள் தனம், மீனாவுக்கு ஒரே அதிர்ச்சி.

Also read... சின்னத்திரையின் நம்பர் 1 சீரியல் எது தெரியுமா? டிஆர்பி ரேட்டிங்கில் புதிய சாதனை!

அப்போது பேசிய மூர்த்தி, ‘நீ ஏன்டா கட்டட வேலைகளை செய்யற, அதற்கு தான் ஆள் இருக்கிறார்களே? என கூறுகிறார். மூர்த்திக்கு பதில் அளித்த முல்லை, "அக்கா தனம் மற்றும் மீனா தங்களோட நகைகளையெல்லாம் கடை கட்டும் வேலைகளுக்காக கொடுத்திருக்காங்க, எங்ககிட்ட எதுவும் இல்ல. அதனால் உழைப்பையாவது கொடுக்காலமே அப்படின்னு, வீட்டு வேலைகளை செய்துகொண்டிருக்கிறோம்" என கூறுகிறார்.

முல்லையின் இந்த பதில், குடும்பத்தினரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதான் இப்போதைய ட்விஸ்ட். புரோமோவில் இடம்பெற்றிருக்கும் சீன்கள், ரிசகர்களுக்கு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: