Bigg boss 4 Tamil | பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது யார்? ப்ரோமோ வீடியோக்கள் தரும் க்ளூ என்ன?

இந்நிலையில் இன்று வெளியன முதல் புரோமோ வீடியோவில் வீட்டில் உள்ள 16 பேரும் தங்களை 1-ல் இருந்து 16 எண் வரை வரிசைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. பிறகு 1-வது எண் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரை குறிக்கு என்று தெரிவிக்கப்படுகிறது.

Bigg boss 4 Tamil | பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது யார்? ப்ரோமோ வீடியோக்கள் தரும் க்ளூ என்ன?
சுரேஷ் சக்ரவர்த்தி
  • News18
  • Last Updated: October 23, 2020, 12:04 PM IST
  • Share this:
பிக்பாஸ் 4-வது சீசனில் 19-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

தமிழில் பிக்பாஸ் 4-வது சீசன் கடந்த 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் நேற்று 17-வது போட்டியாளராக கடந்த வாரத்தில் என்ட்ரி கொடுத்தார் அர்ச்சனா. மேலும் கடந்த வாரம் எவிக்‌ஷனின் ரேகா வெளியேற்றப்பட்டார்.

இந்த வார நாமினேஷன் லிஸ்டில் பாலாஜி, அனிதா, ஆஜித், சுரேஷ், ஆரி உள்ளனர். இந்த நிலையில் இந்த வாரம் வீடா இல்லை காடா என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. அந்த டாஸ்கில் மோதல், சண்டை, அழுகை என சுவாரஸ்யமாக சென்றது. அதனை தொடர்ந்து நேற்று ஒரு புதிய டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் பிக் பாஸ் வீடு ஆனந்த குடும்பமா அல்லது போட்டிகளமா என்ற தலைப்பில் பட்டிமன்ற போட்டி நடைபெற்றது. இதற்கு அர்ச்சனா நடுவராக அமர்ந்திருந்தார். அனைவரும் பேசி முடித்தவுடன் இந்த வீட்டில் போட்டியும் இருக்க வேண்டும் ஆனந்தமும் இருக்க வேண்டும் என்று அர்ச்சனா கூறி பட்டிமன்றத்தை நிறைவு செய்தார்.




Also read... தீபாவளிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகும் நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்'



இந்நிலையில் இன்று வெளியன முதல் புரோமோ வீடியோவில் வீட்டில் உள்ள 16 பேரும் தங்களை 1-ல் இருந்து 16 எண் வரை வரிசைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. பிறகு 1-வது எண் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரை குறிக்கு என்று தெரிவிக்கப்படுகிறது.அதனை தொடர்ந்து வரும் வரிசை எண் ஒவ்வொரு வாரத்திற்கான எவிக்‌ஷனை குறிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் 16-வது எண்ணில் நிற்பவர் இந்த வாரம் நடைபெறும் எவிக்‌ஷனில் வெளியேறுபவராக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு கூறுகையில் அந்த வீடியோவில் 16-வது எண்ணில் நின்றுகொண்டிருந்தது சுரேஷ் சக்கரவர்த்தியாகும். இதனல் இந்த வாரம் பிக்காஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுபவர் சுரேஷ் சக்ரவர்த்தியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
First published: October 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading