Bigg boss 4 Tamil | கோபப்படாமல் இருக்க முடியாது... சக போட்டியாளர்களால் ஆவேசமடைந்த பாலாஜி!

பாலாஜி பேசுவது சில நேரங்களில் மனதை கஷ்டப்படுத்தும் வகையில் இருப்பதாக சோம் தெரிவித்தார், அதன் தொடர்ந்து பேசிய அர்ச்சனா, பாலாஜி ரொம்ப கோபப்படுவதாக கூறுகிறார். இதனை கேட்டு நாற்காலியில் இருந்து எழுந்த பாலாஜி கோபப்படாமல் இருக்க முடியாது, கோபப்படுவது மைனஸ் ஒன்னும் கிடையாது என ஆவேசமாக கூறுகிறார்.

Bigg boss 4 Tamil | கோபப்படாமல் இருக்க முடியாது... சக போட்டியாளர்களால் ஆவேசமடைந்த பாலாஜி!
அர்ச்சனா மற்றும் பாலாஜி
  • News18
  • Last Updated: October 23, 2020, 4:34 PM IST
  • Share this:
பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. கடத்த வாரம் ரேகா வெளியேறிய நிலையில் இந்த வாரம் யார் வெளியேறப்போவது என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இந்த நிலையில் இரண்டாவது ப்ரோமோவில் முகத்திரை போட்டுள்ள போட்டியாளர் யார்? என்பது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. அதில் பெரும்பாலானோர் பாலஜியை தேர்வு செய்கின்றனர். அதன் பின்னர் வேல்முருகன், மற்றும் சோம் ஆகியோரும் பாலாஜியை தேர்வு செய்தனர்.

பாலாஜி பேசுவது சில நேரங்களில் மனதை கஷ்டப்படுத்தும் வகையில் இருப்பதாக சோம் தெரிவித்தார், அதன் தொடர்ந்து பேசிய அர்ச்சனா, பாலாஜி ரொம்ப கோபப்படுவதாக கூறுகிறார். இதனை கேட்டு நாற்காலியில் இருந்து எழுந்த பாலாஜி கோபப்படாமல் இருக்க முடியாது, கோபப்படுவது மைனஸ் ஒன்னும் கிடையாது என ஆவேசமாக கூறுகிறார். அதில் ரியோவையும் சிலர் தேர்வு செய்திருப்பது தெரிகிறது. இறுதியாக இருவரில் ஒருவருக்கு மட்டும் முகத்திரை போடலாம், அதற்கு காரணம் அவர்களது வயது, பக்குவம் மற்றும் அதனை அவர்கள் வெளிப்படுத்தும் விதம் என அர்ச்சனா கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

Also read... Bigg boss 4 Tamil | பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது யார்? ப்ரோமோ வீடியோக்கள் தரும் க்ளூ என்ன?


இந்த ப்ரோமோவை பார்த்த பாலாஜி ரசிகர்கள் சிலர், அவர் எப்போதும் மனதில் எதுவும் வைத்துக்கொள்ளாமல் பேசுபவர் என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். முன்னதாக வெளியான முதல் ப்ரோமோவில் உங்களை நீங்களே வரிசைப்படுத்த வேண்டும், அதில் பதினோறாவதாக இருக்கும் நபர் இந்தவாரம் வெளியேறப்போகும் நபராக இருக்கலாம் என பிக் பாஸ் அறிவிக்கிறார். அதன்படி போட்டியாளர்களாய் தங்களை ஒவ்வொரு நபராக வரிசைப்படுத்திக்கொள்கின்றனர். அதில் ரம்யா சவாலான போட்டியாளர் என சுரேஷ் கூறுகிறார்.

இதனால் ரம்யா முதல் எண்ணில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ப்ரோமோவின் முடிவில் சுரேஷ் பதினாறாவது இடத்தில் இருப்பது காட்டப்பட்டுள்ளது. சுரேஷ், அனிதா, பாலாஜி, ஆஜித், ஆரி ஆகியோர் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் உள்ள நிலையில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் சுரேஷ் வெளியாவது முதல் ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: October 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading