Bigg boss 4 Tamil | பிக் பாஸ் வீடு போட்டி களமா? ஆனந்த குடும்பமா? இன்று நடக்கும் சிறப்பு பட்டிமன்றம்!

பிக் பாஸ் வீடு போட்டிகளமா அல்லது ஆனந்த குடும்பமா என்று இன்று நடக்கும் சிறப்பு பட்டிமன்றம் குறித்த புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg boss 4 Tamil | பிக் பாஸ் வீடு போட்டி களமா? ஆனந்த குடும்பமா? இன்று நடக்கும் சிறப்பு பட்டிமன்றம்!
அனிதா மற்றும் சுரேஷ்
  • News18
  • Last Updated: October 22, 2020, 3:56 PM IST
  • Share this:
பிக் பாஸ் வீட்டில் தினமும் ஒவ்வொரு டாஸ்க்கும் கொடுக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். கடந்த வாரம் ரேகா, வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் பாலாஜி, அனிதா, ஆஜித், சுரேஷ், ஆரி உள்ளனர். இந்த நிலையில் இறுதியாக வீடா இல்லை காடா என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. அந்த டாஸ்கில் மோதல், சண்டை, அழுகை என சுவாரஸ்யமாக சென்றது. இந்த நிலையில் இன்று ஒரு புதிய டாஸ்க் வழங்கப்படுவது இரண்டாவது ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

அதில் பிக் பாஸ் வீடு ஆனந்த குடும்பம், போட்டிகளம் ஆகிய தலைப்பில் பட்டிமன்ற போட்டி நடைபெறுகிறது. அதில் முதலில் பேசிய வேல் முருகன் இந்த பிக் பாஸ் ஒரு குடும்பம், இந்த குடும்பம் இருந்தால் தான் போட்டிகள் நடைபெறும் நாம் வெற்றி பெறுவோம் என கூறுகிறார். அதன் பின்னர் பேசிய அனிதா, அன்பு, அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என கூறினீர்கள் அல்லவா, பின்னர் எதற்காக அன்று ஹார்ட் பிரேக் குத்தும் போது அழுதீர்கள்? என கேள்வி எழுப்புகிறார்.




Also read... Bigg boss 4 Tamil | பிக்பாஸ் வீட்டில் மீண்டும் தலைதூக்கும் குரூப்பிஸம் பிரச்னை..



இந்த போட்டிகளத்தில் அனைவரும் தங்களது தேவைக்காக தான் வந்துள்ளோம் என ரியோ கூறுகிறார். இதனை தொடர்ந்து வந்த நிஷா, புறணி பேசுவதை அழிங்கள். ஒருவரது உள்ளத்தையும், உருவத்தையும் உடைக்கும் போது தான் அந்த புறணி அசிங்கம், அந்த புறணியைத்தான் வெளியில் இருப்பவர்கள் செருப்பால் அடிப்பார்கள் என கோவமாக பேசுகிறார்.

இந்த பட்டிமன்றத்திற்கு அர்ச்சனா நடுவராக அமர்ந்திருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் ஏற்கனவே வாக்குவாதங்களுக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்றைய டாஸ்க் போட்டியாளர்களிடையே பிரச்சனைகளை உருவாக்கும் வகையில் இருக்கிறது. இதனால் இன்றைய நிகழ்ச்சியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
First published: October 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading