முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இனி தமிழோட ஆட்டம் வேற மாதிரி இருக்கும் - விறுவிறுப்பாகும் தமிழும் சரஸ்வதியும்!

இனி தமிழோட ஆட்டம் வேற மாதிரி இருக்கும் - விறுவிறுப்பாகும் தமிழும் சரஸ்வதியும்!

தமிழும் சரஸ்வதியும்

தமிழும் சரஸ்வதியும்

கொலைக்காரன் எனக் கூப்பிட்டதைக் கேட்டு உடைந்து போனான் தமிழ். உடனே தனது மனைவி சரஸ்வதியை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இதுவரை எதார்த்தமாக இருந்த தமிழ் இனி தன்னை சூழ்ந்துள்ள சூழ்ச்சிகளை முறியடிக்கும் வகையில் வீறு கொண்டு எழும் வகையில் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் கதை நகர்கிறது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது. ஒற்றுமையாக இருந்த கோதை குடும்பத்தை பிரிக்க வேண்டும் என ஒருபக்கம் சந்திரகலாவும், மறுபுறம் அர்ஜுன் குடும்பமும் ராத்திரி பகலாக வேலை செய்தனர். சேர்மனாக வேண்டும் என்ற வெறியில் தமிழை வீழ்த்த, தானே ஆள் வைத்து தன்னை கத்தியில் குத்த வைத்த அர்ஜுன், அந்த பழியை தூக்கி தமிழ் மேல் போட்டு, மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டான்.

தன் கணவன் அர்ஜுனை அண்ணன் தமிழ் தான் கொலை செய்ய முயற்சித்திருக்கிறார் என ராகினியும் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தாள். தமிழ் என்ன சொல்ல வருகிறான் என்பதை காது கொடுத்து கேட்காமலேயே இதை கோதையும் நம்பிவிட்டாள். அவனை கொலைக்காரன் எனக் கூப்பிட்டதைக் கேட்டு உடைந்து போனான் தமிழ். உடனே தனது மனைவி சரஸ்வதியை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.

' isDesktop="true" id="905288" youtubeid="VCtIyniB4YQ" category="television">

நண்பன் நமச்சியின் ரூமில் அடைக்கலமாகியிருக்கும் தமிழையும், சரஸ்வதியையும், சரஸ்வதியின் பெற்றோர் சந்திக்கின்றனர். பின்னர் தங்கள் வீட்டுக்கு வரும்படி அழைக்கின்றனர். அதற்கு பெத்தவங்களோட சொத்து இருந்தா மட்டும் தான் என்னால பிழைக்க முடியும் என நினைக்கிறீர்களா? நீங்க சப்போர்ட் பண்ணலைன்னா, என்னால என் பொண்டாட்டியை வச்சு காப்பாத்த முடியாதுன்னு நினைக்கிறீங்களா? இனி நீங்க பாத்த பழைய தமிழ் இல்லை நான், சரஸ்வதி ஒன்னும் என் வீட்ட நம்பி வரல, என்னை நம்பி தான் வந்திருக்கா. என் உழைப்பு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, ஒருநாள் பெரியாளாகி அவளை ராணி மாதிரி வச்சு காப்பாத்துவேன் என சீறி எழுகிறான் தமிழ்.

அர்ஜுனின் உண்மையான முகம் கோதை குடும்பத்துக்கு தெரிய வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Vijay tv