Home /News /entertainment /

ட்ரெண்டிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தமிழும் சரஸ்வதியும் கோதை!

ட்ரெண்டிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தமிழும் சரஸ்வதியும் கோதை!

மீரா கிருஷ்ணா

மீரா கிருஷ்ணா

42 வயது தீபக்கிற்கு அம்மாவாக நடிக்கும் மீரா கிருஷ்ணாவிற்கு வயது வெறும் 35 தான்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கோதையாக நடித்து வரும் நடிகை மீரா கிருஷ்ணா இன்ஸ்டகிராமில் ட்ரெண்டாகும் ஒரு பாடலுக்கு குத்தாட்டாம் ஆடியுள்ளார். 

    கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் நடிகை மீரா கிருஷ்ணா. இவர் ஒரு கிளாசிக்கல் டான்ஸர். கேரளாவில் புகழ்பெற்ற, ‘கேரளா ஸ்கூல் ஃபெஸ்டிவல்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதன் மூலம் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்தார். மலையாள சினிமா, சீரியல் ஆர்டிஸ்டுகள் பலருக்கும் அந்த நிகழ்ச்சி தான் எண்ட்ரி டிக்கெட் வழங்கியது.

    மார்கம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மீரா கிருஷ்ணா, மஞ்சுபோலொரு பெண்குட்டி, பிரேமா ராஜ்ஜியம் போன்ற படங்களில் நடித்தார். ஆங்கரிங், சீரியல் ஆக்டிங் என பரபரப்பாக இருக்கும் அவர், மலையாளத்தில் சூர்யா டிவி, ஃப்ளவர்ஸ், ஏசியொநெட் உள்ளிட்ட டிவிகளில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்துள்ளார்.

    கல்லூரி முடித்ததும் திருமணமாகி சென்னையில் செட்டில் ஆகியுள்ளார். இவரது கணவர் ராகவா லாரன்ஸ் மாஸ்டரின் உதவியாளராக இருக்கிறார். குழந்தைகள், குடும்பப் பொறுப்புகள் என சிறிது காலம் பிஸியாக இருந்த மீரா, நீண்ட இடைவெளிக்கு பின் கலைஞர் டிவி-யின் பொக்கிஷம் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதன்பிறகு இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியல். அதோடு சித்தி 2 சீரியலிலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    லைக்ஸை குவிக்கும் காஜல் அகர்வாலின் குடும்பப் படம்!

    தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில், தமிழின் அம்மா கோதையாக நடித்து வருகிறார். 42 வயது தீபக்கிற்கு அம்மாவாக நடிக்கும் மீரா கிருஷ்ணாவிற்கு வயது வெறும் 35 தான். வில்லி, குணச்சித்திரம் எந்த கதாபாத்திரம் என்றாலும், தனது முழு அர்ப்பணிப்போடு நடித்து ஸ்கோர் செய்வதில் வல்லவரான இவர் அவ்வப்போது தனது நடன வீடியோக்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துக் கொள்கிறார்.




    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அந்த வகையில் தற்போது இன்ஸ்டகிராமில் ட்ரெண்டாகும் ”ரா ரா” என்ற பாடலுக்கு குத்து டான்ஸ் ஆடியுள்ளார் மீரா கிருஷ்ணா. அந்த வீடியோ ரசிகர்களிடம் லைக்ஸை குவித்து வருகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி