தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடை பார்க்க போகும் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ட்விஸ்ட் காத்துக் கொண்டிருக்கிறது. அதுக் குறித்த புரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லி சந்திரகலாவின் அனைத்து சதித்திட்டங்களை தகர்த்து எறிந்து சரஸ்வதி பிளஸ் டூ தேர்வில் பாஸ் ஆகிவிட்டார். தமிழ் மற்றும் சரஸ்வதியை மீண்டும் வீட்டுக்குள் சேர விடக்கூடாது என்று பல சூழ்ச்சிகளை செய்தார் சந்திரகலா. ஆனால் கோதை அம்மா, தமிழ் - சரஸ்வதியை மீண்டும் வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டார். இப்போது அனைவரும் ஒரே வீட்டில் தான் வசித்து வருகிறார்கள். ஆனாலும் தமிழ் - சரஸ்வதியிடம் யாரும் முன்பு போல் பேசுவது இல்லை. இப்போது அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் மூத்த மருமகள் வசு தான். ஆனால் தன்னுடைய மகளே அவர்களுக்கு துணை போவது சந்திரலேகாவுக்கு பிடிக்கவில்லை.
பாரதிக்கு காத்திருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சி.. கண்ணம்மாவுக்கு உதவ போவது இவர் தான்!
இதற்கிடையில் சந்திரகலா, அவரின் மாப்பிள்ளை கார்த்திக்கிடம் சரஸ்வதி போட்ட சபத்தில் சரஸ்வதி ஜெயிக்க கூடாது, தமிழுக்கு மீண்டும் ஜி.எம் பதவி போக கூடாது என்று பேப்பர் திருத்திய ஆசிரியருக்கு கட்டு கட்டாக லஞ்சமும் கொடுக்கிறார். ஆனால் இத்தனை பிரச்சனைகளையும் தாண்டி சரஸ்வதி 86% எடுத்து பிளஸ் டூ தேர்வில் பாஸ் ஆகிவிடுகிறார். தன்னால் தனது கணவர் தமிழுக்கு பறிப்பொன ஜி.எம் பதவியை மீண்டும் வாங்கி தர, கார்த்திக் ஆஃபீஸூக்கு செல்கிறார். அங்கே, கார்த்திகிடம் சபதத்தை பற்றி ஞாபகப்படுத்தி பிளஸ் டூ தேர்வில் பாஸ் ஆகிவிட்டதாக கம்பீரமாக சொல்கிறார். கார்த்திக் அதிர்ச்சியில் உறைந்து போக, இனிமேல் தமிழுக்கு தான் ஜி. எம் பதவி என்று அடித்து பேசுகிறார்.
சூப்பர் சிங்கர் பிரியங்காவுக்கு விஜய் டிவி செய்த காரியம்..இது நியாயமே இல்லை என சண்டை போடும் ரசிகர்கள்!
இதுக்குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லை 8 முறை மறுதேர்வு எழுதி பாஸ் ஆகாத சரஸ்வதி, முதல்முறையாக தனது கணவருக்காக போட்ட சபத்தில் ஜெயித்துக்காட்டியுள்ளார். இது எப்படி நடந்தது? சந்திரகலாவின் சதித்திட்டம் என்ன ஆனது? போன்ற கேள்விகளுக்கு இன்றைய எபிசோடில் விடை கிடைக்கும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.