முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அமீர் - பாவ்னிக்கு தகுதியில்லை. எல்லோர் முன்பும் போட்டுடைத்த தாமரை செல்வி!

அமீர் - பாவ்னிக்கு தகுதியில்லை. எல்லோர் முன்பும் போட்டுடைத்த தாமரை செல்வி!

தாமரை செல்வி

தாமரை செல்வி

டாஸ்கில் தாமரை செல்வி அமீர் - பாவ்னிக்கு அந்த தகுதி இல்லை என கூறுகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர் - பாவ்னி அந்த இடத்திற்கு செல்ல தகுதியானவர்கள் இல்லை என்று எல்லோர் முன்பும் தாமரை செல்வி தைரியமாக கூறுகிறார். இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்தாலும் அதில் ஒருசில நிகழ்ச்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்தடுத்த சீசன்கள் ஒளிப்பரப்பாக தொடங்கும்.  அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் பிபி ஜோடிகள் சீசன் 2 ஒளிப்பரப்பாகி வருகிறது.

கடந்த ஆண்டு பிபி ஜோடிகள் முதல் சீசன் ஒளிப்பரப்பானது. இதில் ஷாரிக் - அனிதா ஜோடி முதல் இடத்தை பிடித்தனர். நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் நடுவர்களாக தலைமை தாங்கினர்.

வருண் - சக்திக்கு வில்லனாகும் தருண்? மெளன ராகம் சீரியலில் அடுத்து வரும் அதிரடி திருப்பம்!

இதன் தொடர்ச்சியாக தற்போது பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடுவராக என்ட்ரி கொடுத்துள்ளார். அவருடன் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இந்த முறை நடுவராக உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அதிகப்படியான ரசிகர்களை பெற்றுள்ள ஜோடி என்றால் அது அமீர் - பாவ்னி. பிக் பாஸ் சீசன் 5ல் இந்த ஜோடிக்கு கிடைத்த ரீச்சை வைத்து பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் இருவரையும் ஜோடியாக களம் இறக்கியது விஜய் டிவி. இருவரும் நடனத்தில் கலக்கி கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லை இருவருவரின் நெருக்கமும் அதிகமாகி வருகிறது.

போன வார எபிசோடில் காதல் சுற்றில் மோதிரத்துடன் பாவ்னிக்கு அமீர் மிகப் பெரிய சர்ப்ரைஸூம் தந்து விட்டார். அமீர் காதலை ஏற்றுக் கொள்ள பாவ்னி கொஞ்சம் நேரமும் கேட்டு இருக்கிறார்.

பிரபல நடிகரின் படத்தில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா.. தேடி வந்த வாய்ப்பு!

இந்த விஷயம் சின்னத்திரையில் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் இந்த வார எபிசோடுக்கான புரமோ வெளியாகியுள்ளது. இதில் வழக்கம் போல் வித்தியாசமான கேம் ஒன்று வைக்கப்படுகிறது. அதாவது பிபி ஜோடிகள் ஃபைனல்ஸூக்கு செல்ல தகுதியானவர்கள் யார்? யாருக்கு தகுதி இல்லை என கூறி அவர்கள் முகத்தில் கலர் பூச வேண்டும்.

' isDesktop="true" id="778257" youtubeid="oRF816CKYtU" category="television">

இந்த டாஸ்கில் தாமரை செல்வி , அமீர் - பாவ்னிக்கு அந்த தகுதி இல்லை என கூறுகிறார். அதற்கு அவர் என்ன காரணம் விளக்கமாக கூறுகிறார் என்று தெரியவில்லை. உடனே நடுவர் ரம்யா கிருஷ்ணன், அதற்கு ஸ்மார்ட் மூவ் தாமரை என வாழ்த்துகிறார். ஆனால் தாமரை செயலால் அமீர் - பாவ்னி முகம் மாறுகிறது. இதை பார்த்த ரசிகர்கள், தாமரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்தவற்றை மனதில் கொண்டு தான் இவ்வாறு நடந்து கொள்வதாக கமெண்டில் கூறி வருகின்றனர். இந்த புரமோவை பார்த்ததும் நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Television, Vijay tv