முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிக்பாஸ் சம்பளத்தை வச்சி எதுவும் பண்ண முடியாது.. தெரிந்தே பணப்பெட்டியை எடுக்காத தாமரை!

பிக்பாஸ் சம்பளத்தை வச்சி எதுவும் பண்ண முடியாது.. தெரிந்தே பணப்பெட்டியை எடுக்காத தாமரை!

பிக் பாஸ் தாமரை

பிக் பாஸ் தாமரை

"பிக் பாஸில் இவ்வளவு நாள் இருந்ததற்காக வரும் சம்பளத்தை வைத்து கொஞ்சம் கடனை அடைத்துவிடுவேன், பின் வெளியில் சென்று சம்பாதித்து மீதமுள்ள கடனை கொடுத்துவிடுவே

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விஜய் டிவியின் டாப்-ரேட்டிங் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீஸன் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எந்த அளவிலான இறுதிக்கட்டம் என்றால், அடுத்த வாரம் இந்நேரம் யார் பிக் பாஸ் சீஸன் 5-யின் டைட்டில் வின்னர் யார்?  என்பது நமக்கெல்லாம் தெரிந்திருக்கும்.

இந்த சீஸனில் இன்னும் ஒரு வாரம் மட்டுமே பாக்கியிருக்கும் நிலையில், ஞாயிறன்று சீஸனின் கடைசி "வார இறுதி" எலிமினேஷன் நடைபெற்றது. அமீர், நிரூப் மற்றும் ராஜு ஆகிய அனைத்து ஆண் போட்டியாளர்களும் ஏற்கனவே இறுதி வாரப் போட்டிக்குள் நுழைந்து விட்டதால், எலிமினேஷன் பட்டியலில் மீதமுள்ள பெண் போட்டியாளர்களான பிரியங்கா, பாவனி மற்றும் தாமரை ஆகியோர்கள் நீடித்தனர்.

அதில் யார் காப்பாற்றப்படபோகிறார் என்கிற எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடிகர் கமல்ஹாசன், மிகவும் எதிர்பார்த்தபடியே விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான பிரியங்கா பெயரை முன்மொழிந்தார். உடன் "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த இறுதி போட்டியாளர்" என்று சூசகமாக அமீர் மற்றும் நிரூப்பை - போட்டிகளின் வழியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

பின்னர் யார் வெளியேற்றப்பட போகிறார் என்கிற கேள்விக்கு, தாமரைச்செல்வி என்கிற பதிலை வெளிப்படுத்தினார் கமல்ஹாசன். தாமரை அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு சிரித்த முகத்தோடு வெளியேறினார்.

தாமரை வெளியேறிய பின் ராஜுவுடன் பேசிய பிரியங்கா , கிராமத்தில் இருந்து வந்த ஒரு பெண், பெரிய அளவிலான அறிமுகம் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்து இவ்வளவு தூரம் பயணித்ததே தாமரைக்கு பெரிய வெற்றி என்று கூறினார்.

இதையும் படிங்க..ஒரு நாள் பிக் பாஸாக மாறும் போட்டியாளர்கள்!

மேலும் "பண பெட்டியை எடுக்கும் முன் தாமரைக்கு தான் அது அதிகம் தேவைப்படும், அவர் எடுத்துக்கொள்கிறாரா என்று கேட்டுச்சொல்" என்று சிபி தன்னிடம் கேட்டதையும் பகிர்ந்தார். நானாகக் கேட்டால் அது தவறாகிவிடும் என்று கூறிய போதும், என் பெயரை சொல்லியே கேள் என்று சிபி கூறியதாகவும் பிரியங்கா குறிப்பிட்டார்.

12 லட்ச ரூபாய் பணப்பெட்டியை எடுக்கும் முன் சிபி நேரடியாகவே தாமரையிடம் உன்னைத்தவிர எனக்கு யாரைப்பற்றியும் யோசிக்கத் தோன்றவில்லை, உனக்கு இந்த பணம் தேவைப்படுமா என்று கேட்டதை மட்டுமே விஜய் டிவி ஒளிபரப்பி இருந்தது. ஆனால் பிரியங்காவை வைத்தும் அவர் அதையே கேட்டுள்ளார் என்பது நேற்றைய நிகழ்ச்சியில் பிரியங்கா கூறும் போதே தெரிய வந்தது.

இதையும் படிங்க.. மாதவனை அசத்திய ஹிரித்திக் ரோஷனின் வேதா லுக்..

மேலும் தாமரை பற்றி பேசிய பிரியங்கா, அவள் எவ்வளவு பணம் வைத்தாலும் எடுக்கும் மனநிலையில் இல்லை என்பதை பற்றியும் பேசினார். அதற்காக "பிக் பாஸில் இவ்வளவு நாள் இருந்ததற்காக வரும் சம்பளத்தை வைத்து கொஞ்சம் கடனை அடைத்துவிடுவேன், பின் வெளியில் சென்று சம்பாதித்து மீதமுள்ள கடனை கொடுத்துவிடுவேன்" என்று தாமரைச்செல்வி கூறியதை உருக்கமாக பகிர்ந்தார்.

இதிலிருந்து, பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 95 நாட்களுக்கும் மேலாக தங்கி தான் சம்பாதித்த பணம், வெளியில் உள்ள கடனை அடைக்க பற்றாது என்று தெரிந்தும் கூட தாமரை மிகவும் தன்னபிக்கையுடன் 12 லட்ச ரூபாய் பணப்பெட்டியை எடுக்கவில்லை என்பதையும், மேலும் தாமரைக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி வழியாக கிடைத்த சம்பளம் மிகவும் குறைவாக இருக்கலாம் அல்லது அவர் கடன் மிகவும் அதிகமாக இருக்கலாம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv