Home /News /entertainment /

ஓ சொல்றியா பாட்டுக்கு தாமரை, ஐக்கி பெர்ரி டான்ஸ்.. வேற லெவல்!

ஓ சொல்றியா பாட்டுக்கு தாமரை, ஐக்கி பெர்ரி டான்ஸ்.. வேற லெவல்!

பிக் பாஸ் தமரை

பிக் பாஸ் தமரை

இது உண்மையாகவே தாமரை தானா என்ற சந்தேகத்தில் மீண்டும் மிண்டும் அந்த வீடியோவை ரீவைண்ட் செய்து பார்த்து வருகின்றனர்.

    பிக் பாஸ் புகழ் தாமரை செல்வியும் ஐக்கி பெர்ரியும் சேர்ந்து சமந்தாவின் ‘ஓ சொல்றியா ’ பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ இன்ஸ்டாவை கலக்கி வருகிறது.

    தமிழ் சின்னத்திரை ரசிகர்களை கவரும் வகையில் பல ரியாலிட்டி ஷோக்கள் தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி வருகின்றன.அதில் ஒன்று தான் பிக் பாஸ் ஷோ. உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரமாண்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 5 கடந்த வாரம் நிறைவடைந்தது. 2021 அக்டோபர் 3-ம் தேதி மொத்தமாக 18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக துவங்கியது பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் தாமரைச்செல்வி

    இதையும் படிங்க.. சிக்கியது ஆதாரம்.. தமிழ் - சரஸ்வதி கல்யாணம் நடக்க வாய்ப்பு இல்லை!

    மேடை நாடக கலைஞரான தாமரை செல்வி சுமார் 98 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்தார். பல கலவையான விமர்சனங்கள் இவர் மீது இருந்தாலும் சாதாரண இடத்தில் இருந்து வந்து போட்டியில் முனைப்பு காட்டி, கோபம், பாசம், சண்டை என பிக் பாஸ் வீட்டில் தாமரை பட்டையை கிளப்பினார். தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையும் அவர் சம்பாதித்து விட்டார். தாமரை ஃபைனல்ஸூக்கு செல்ல தகுதியானவர் என்று இப்போது வரை ஒரு கூட்டம் இணையத்தில் கத்திக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு தாமரை ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இப்போது பிக் பாஸ் சீசன் 5 முடிந்து விட்டதால் போட்டியாளர்கள் சமூகவலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர்.

    இதையும் படிங்க.. பிக் பாஸ் சீஸன் 5 நிகழ்ச்சி முடிந்தாலும் இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை!

    தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில் தாமரை செல்வியும், ஐக்கி பெர்ரியும் சேர்ந்து ஷூட்டிங் ஒன்றில் பங்கேற்றனர். அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவரும் சேர்ந்து சமந்தாவின் சூப்பர் டூப்பர் ஹிட் சாங்கான ஓ சொல்றியா ’பாடலுக்கு நடனம் ஆடி உள்ளனர். இந்த வீடியோவை ஐக்கி பெர்ரி தன்னுடைய இன்ஸ்ட பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Iykki Berry (@iykkiberry)






    அதுமட்டுமில்லை, இந்த வீடியோvil தாமரை செல்வி பார்ப்பதற்கு அடையாளமே தெரியாமல் மேக்கபில் சினிமா நடிகைகளை போல் ஜொலிக்கிறார். இதை பார்த்து ஒட்டு மொத்த பிக் பாஸ் ரசிகர்களும் ஷாக் ஆகியுள்ளனர்.  இது உண்மையாகவே தாமரை தானா என்ற சந்தேகத்தில் மீண்டும் மிண்டும் அந்த வீடியோவை ரீவைண்ட் செய்து பார்த்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி