பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆன நாட்டுபுற கலைஞர் தாமரை செல்வி தனது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த முறை முகம் தெரியாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மதுமிதா, ஸ்ருதி போன்ற மாடல்களுடன் நாடக கலைஞரான தாமரைச் செல்வியும் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இவரின் நடவடிக்கை, பேச்சு, குணாதிசயத்தை கண்டு இவர் 2 வாரத்தில் கிளம்பி விடுவார் என கணித்தவர்களின் எண்ணத்தை பொய்யாக்கிவிட்டு 82 நாட்களை தாண்டி பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் கலக்கியவர் தாமரை.இவருக்கு தற்போது ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் பெருகியுள்ளது.
’ராஜா ராணி 2’ சீரியல் நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டது! உங்களுக்கு தெரியுமா?
தாமரையின் வெகுளித்தனமான பேச்சு, பாசம், வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்ற குணம், டாஸ்க் என்று வந்ததும் இறங்கி ஆடுவது என ஆண் போட்டியாளர்களையே பின்னுக்கு தள்ளி விளையாடியவர் தாமரை. கடைசி வரை பிக் பாஸ் வீட்டில் இருந்தவர் வெற்றி வாகை சூடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஃபைனல்ஸூக்கு முந்தைய வாரம் வெளியேறினார். விட்டதை பிடிக்க பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டார். அதிலும் இறுதி வரை நின்று விளையாடினார். இந்நிலையில் தற்போது தாமரை செல்வி, தனது கணவருடன் பிபி ஜோடிகள் சீசன் 2வில் நடனம் ஆடி வருகிறார்.
தாமரை செல்லும் இடமெல்லாம் கூட்டம் குவிகிறது. அவருடன் பேசவும், செல்பி எடுத்துக் கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் தாமரை சமீபத்தில் தி நகரில் இருக்கும் புகழ் பெற்ற ஜவுளி கடைக்கு ஷாப்பிங் செய்ய சென்றுள்ளார். அந்த கடைக்கு சமீபகாலமாக பல சின்னத்திரை பிரபலங்கள் ஸ்பெஷல் கெஸ்டாக அழைக்கப்பட்டு வருகின்றனர். அப்படி தான் தாமரையும் அவரின் கணவரும் சென்றனர்.
அந்த கடையில் சர்ப்பிரைஸாக தாமரைக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது. கடை ஊழியர்களுடன் சேர்ந்து தாமரை அவரின் கணவர் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி இருக்கின்றனர். இந்த புகைப்படத்தை தாமரை செல்வி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு நின்றுவிடவில்லை, பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஐக்கி பெர்ரியும் தனது வீட்டுக்கு தாமரையை அழைத்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.