Home /News /entertainment /

என்ன தாமரை இதெல்லாம்? ஷாக்கான ரசிகர்கள்! வைரலாகும் தாமரை செல்வியின் டான்ஸ் வீடியோ

என்ன தாமரை இதெல்லாம்? ஷாக்கான ரசிகர்கள்! வைரலாகும் தாமரை செல்வியின் டான்ஸ் வீடியோ

தாமரை செல்வி பிக் பாஸ்

தாமரை செல்வி பிக் பாஸ்

தாமரை மற்றும் ஐக்கி பெர்ரி இருவரும் சேர்ந்து சிறப்பான முறையில் நடனமாடியுள்ளார். சமந்தா நடனமாடிய இந்த பாடல் வரிகளுக்கு ஏற்ப இவர்கள் இருவரும் உடையும் அணிந்திருந்தனர்

    கடந்த சில வாரங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய ட்ரெண்டிங் நியூஸ் தான் எல்லா தளத்திலும் பேசு பொருளாக இருந்தது. குறிப்பாக யார் வெற்றியாளர் ஆவார் என்கிற மிக பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வந்தது. கலந்து கொண்ட 20 போட்டியாளர்களின் பலர் வெளியேறிய நிலையில் 5 பேர் மட்டுமே இறுதி கட்டத்தை நெருங்கினர்.

    இறுதி போட்டியில் ராஜூ, பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப் ஆகியோர் தகுதி பெற்றனர். இவர்களுக்குள் பல முனை போட்டிகள் நடந்து வந்தது. இந்த ஐந்து பேரில் பிக் பாஸ் சீசன் 5 பட்டத்தை யார் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. இந்நிலையில் ஜனவரி 16ம் தேதி இறுதி போட்டி வெற்றிகரமாக முடிந்தது.

    பிக் பாஸ் சீசன் 5 பட்டத்தை ராஜு வென்றார். அவரது வெற்றியை தமிழ்நாடே கொண்டாடியது என்றே கூறலாம். ஆரம்பம் முதலே ராஜீவிற்கு மக்கள் ஆதரவு அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவரை போன்று தாமரைச்செல்விக்கும் அதிக ரசிகர்கள் இருந்தனர். முதல் இரண்டு வாரங்களிலே இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், 15 வாரங்கள் வரை இவர் சிறப்பாக விளையாடினார். மேலும் இதன் மூலம் டாப் 6 போட்டியாளர்களில் ஒருவராகவும் இவர் தகுதி பெற்றார்.

    இதையும் படிங்க.. வருங்கால மனைவியுடன் குக் வித் கோமாளி புகழ்? வலம் வரும் புகைப்படம்!

    இந்நிலையில், தாமரை, மற்றொரு பிக் பாஸ் போட்டியாளரான ஐக்கி பெர்ரியுடன் சேர்ந்து சிறப்பாக நடனமாடி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதை ஐக்கி பெர்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு "நீங்கள் மன திருப்தியுடன் இருந்தால், நீங்கள் தான் உலகின் மகிழ்ச்சியான நபர். என் வார்த்தைகளை நம்புங்கள். தாமரை அக்காவின் முதல் ஷூட். அக்கா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்" என்று மகிழ்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.

    இதையும் படிங்க.. நான் முட்டாள்தனம் பண்ணிட்டேன் - வனிதா விஜயகுமார்

    மேலும் அந்த வீடியோவில், சமீபத்தில் வைரலான புஷ்பா படத்தின் 'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு தாமரை மற்றும் ஐக்கி பெர்ரி இருவரும் சேர்ந்து சிறப்பான முறையில் நடனமாடியுள்ளார். சமந்தா நடனமாடிய இந்த பாடல் வரிகளுக்கு ஏற்ப இவர்கள் இருவரும் உடையும் அணிந்திருந்தனர். இந்த வீடியோவை தான் நெட்டிசன்கள் வைரலாகி வருகின்றனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Iykki Berry (@iykkiberry)






    சுமார் 36000 பேர் இந்த பதிவை லைக் செய்து வந்துள்ளனர். மேலும் பலர் இது குறித்து தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர் 'பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாமரையா இவர்!!' என்று கமெண்ட் செய்துள்ளார். 'சூப்பர் டான்ஸ்" என்று பலர் கருத்து கூறியுள்ளனர்.

    எது எப்படியோ, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தாமரை செல்விக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்கும் என்பது நிச்சசயமாகி உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி