Home /News /entertainment /

பிக் பாஸுக்கு எதற்காக வந்தோம் என்பதை மறந்து விட்டாரா தாமரை? பணத்தை எடுக்காதது ஏன்?

பிக் பாஸுக்கு எதற்காக வந்தோம் என்பதை மறந்து விட்டாரா தாமரை? பணத்தை எடுக்காதது ஏன்?

பிக் பாஸ் தாமரை

பிக் பாஸ் தாமரை

தாமரையை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் அவருக்காக சிந்தித்துள்ளனர். ஆனால் தாமரை அதை செய்யவில்லை

  பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் இணையத்தில் அதிகம் விவாதித்து கொள்வதும், புலம்பி தீர்ப்பதும், வருத்தப்படுவதும் இந்த ஒரு நிகழ்வை பற்றி தான். பிக் பாஸ் 12 லட்சம் வரையிலும் ஆஃபர் செய்த பிறகும் ஏன் தாமரை பணத்தை எடுக்கவில்லை? எடுக்காததற்கு என்ன காரணம்? எடுத்து இருந்தால் கண்டிப்பாக நல்ல முடிவாக இருந்து இருக்கும். அவரின் கடன் பிரச்சனை தீர்ந்து இருக்கும் என ரசிகர்களின் பலவிதமான கருத்துக்களை இணையத்தில் பார்க்க முடிகிறது.  அதுக்குறித்த பார்வை தான் இது. 

  விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 தொடங்கியதில் இருந்து தாமரை செல்வி முகம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பதிந்து விட்டது. நாடக கலைஞரான தாமரை செல்வி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கு பெற்றது ஒட்டு மொத்த நாடக துறைக்கே பெருமையாக இருந்தது. இதை தான் அவரும் பலமுறை பல இடங்களில் பிக் பாஸ் வீட்டில் பதிவு செய்து இருப்பார். இப்படியொரு வாய்ப்பை அவர் எப்படி பயன்படுத்திக் கொள்வார்? என்ற எதிர்ப்பார்ப்பு கமல் உட்பட அனைவருக்கும் அதிகமாகவே இருந்தது. ஆனால் சும்மா சொல்லக்கூடாது கொடுத்த வாய்ப்பை சரியாகவே பயன்படுத்தி கிடைத்த கேப்பில் எல்லாம் தாமரை சிக்சர் அடித்தார்.

  பிக் பாஸ் வீட்டில் சண்டை போடுவதிலும் சரி, அன்பை காட்டுவதிலும் சரி தாமரையை அடித்து கொள்ள முடியாது. இதுவரை பிக் பாஸ் வீட்டில் தாமரைக்கும் பிரியங்காவுக்கும் இடையில் ஏகப்பட்ட சண்டைகள் அரங்கேறியுள்ளன. ஆனால் 2 நாட்களுக்குள் இருவரும் சண்டையை முடித்துக் கொண்டு படுக்கையில் கொஞ்சி கொஞ்சி பேசி முத்தமிட்டு கொள்வார்கள். இது தான் இந்த சீசனின் வெற்றியும், இதே  தான் இந்த சீசனின் தோல்விக்கும் காரணம்.

  ஒருவாரம் மட்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்த நடிகை ரம்யா கிருஷ்ணனும் தாமரையை புகழ்ந்து தள்ளிவிட்டு சென்றார். அதே போல் ஃபிரீஸ் டாஸ்கில் உள்ளே வந்த போட்டியாளர்களின் குடும்பங்களும் தாமரையை கொண்டாடி விட்டு சென்றனர். பிக் பாஸ் வீட்டில் தாமரை மலரும் என்று ரசிகர்கள் கூட்டம் இணையத்தில் ஆர்பரித்தனர். ஏற்கெனவே தனது நாடக திறமையால் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருக்கும் தமிழ் ரசிகர்களை பெற்றுள்ள தாமரை ,பிக் பாஸூக்கு வந்த பிறகு புகழின் உச்சிக்கே சென்றார் என்றால் அது மிகையல்ல.

  பிக் பாஸ் வீட்டில் நடந்த பல டாஸ்கில் தாமரை இந்த கருத்தை பதிவு செய்துள்ளார். ‘நான் இவ்வளவு தூரம் வருவேன்னு நினைக்கவே இல்லை. என்னுடைய பெயர் மொத்த ஊருக்கும் தெரிந்து விட்டது. இதுவே என்னுடைய நாடக துறைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி தான். பைனல்ஸில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசைலாம் இல்லை. யாரு ஜெயிச்சாலும் சந்தோஷம் தான்” என்பார். அதே போல் தனக்கு கடன் பிரச்சனை நிறைய இருப்பதாகவும் குடும்ப பிரச்சனையை சரிசெய்ய இந்த பிக் பாஸில் கொடுக்கும் பணம் உதவும் , பிள்ளைகளின் வருங்காலத்திற்கு ஒரு சேமிப்பை செய்திட வேண்டும் என்பதே என்  ஆசை என்று சிபி, ராஜூ, அக்‌ஷரா, வருணிடம் தாமரை அதிக முறை பேசி இருக்கிறார்.  அப்படி இருக்கும் போது 12 லட்சம் வரை பிக் பாஸ் ஆஃபர் கொடுக்கும் போது, தாமரை சிந்தித்து செயல்பட்டு ஏன் அந்தபணத்தை எடுக்கவில்லை என்பது தான் அவரின் ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது. 12 லட்சத்துடன் வெளியே செல்ல முடிவு எடுத்த சிபி கடைசி வரை தாமரையின் முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தார். ஏனென்றால் தாமரைக்கு அந்த பணம் எவ்வளவு முக்கியம் என்பது அவருக்கு தெரியும். அதே போல் பாவனியும், “ பணம் தேவை இருந்தால் ஸ்மார்ட்டாக செயல்படு தாமரை” என சூசகமாக சொன்னார். ஆனால் தாமரை , வீட்டில் இருப்பது தான் முக்கியம். இன்னும் ஒரு வாரம் வீட்டில் இருந்துட்டு போறேன்னு சொன்னார். இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த வீட்டில் இருக்க முடியும் என நினைக்கிறார் தாமரை என தெரியவில்லை.

  இதையும் படிங்க.. பிக் பாஸ் 5 இறுதி போட்டிக்குள் நுழையும் இரண்டாவது நபர்! அடுத்த ட்விஸ்ட்

  பாவனி ஒருபடி போய், ”நான் பணத்தை எடுத்து கொண்டு வெளியே போறேன்,. நீ வெளியில் வந்து அந்த பணத்தை வாங்கி கொள் தாமரை” என்றார். உனக்கு எவ்வளவு கடன் பிரச்சனை இருக்கு என்றும் கேட்டறிந்தார். மொத்தத்தில் தாமரையை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் அவருக்காக சிந்தித்துள்ளனர். ஆனால் தாமரை அதை செய்யவில்லை. இப்போது ஸ்மார்ட் மூவாக 12 லட்சத்துடன் வெளியில் வந்த சிபிக்கு ஆதரவு குரல்கள் ஒலித்து வருகின்றன. அதே போல் தாமரை செய்து இருந்தாலும் அதை வரவேற்ககூடிய ரசிகர்கள் இங்கு ஏராளம்.

  இதையும் படிங்க.. பிக் பாஸ் அமீர் இப்படிப்பட்டவரா? வீடியோவால் தெரிய வந்த உண்மை! கண்ணீரில் ரசிகர்கள் கூட்டம்

  அதே நேரம், தாமரையின் ஸ்போர்ட்ஸ்மேன் ஷிப்பையும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். பணத்தை விட இறுதி மேடைக்கு செல்வது முக்கியம் என நினைக்கிறார். இவ்வளவு பண கஷ்டத்திலும் தாமரைக்கு பணம் மீது ஆசை செல்லாமல் இருந்தது மிகப் பெரிய விஷயம். அதையும் ரசிகர்கள் கொண்டாடாமல் இல்லை. அதே நேரம், பிக் பாஸில் ராஜூ மற்றும் பிரியங்காவு ஜெயிக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வரும் நிலையில், தாமரை இந்த தருணத்தில் சிறப்பாக சிந்தித்து செயல்பட்டு இருக்க வேண்டும் என்று இணையவாசிகள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

  அடுத்த செய்தி