ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சின்னத்திரை டூ வெள்ளித்திரை.. தாமரை செல்விக்கு அடித்தது யோகம்!

சின்னத்திரை டூ வெள்ளித்திரை.. தாமரை செல்விக்கு அடித்தது யோகம்!

தாமரை செல்வி

தாமரை செல்வி

தாமரை செல்வி வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஃபேமஸ் ஆன தாமரை செல்வி அடுத்து படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இதுக் குறித்து அவரே இன்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் மக்களை பெரிதும் கவர்ந்த போட்டியாளராக வலம் வந்தவர் தாமரை செல்வி. பெரிய பின்புலம் இல்லாத சாதாரண மேடை நாடக கலைஞராக அறிமுகம் ஆனவர் மிக அருமையாக கேமை விளையாடி கிட்டத்தட்ட இறுதி வரை களத்தில் நின்றார்.தனது வெள்ளந்தியான பேச்சு மற்றும் நடத்தையால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார் தாமரை.

  8 வருட காத்திருப்பு.. நல்ல செய்தி சொன்ன சரவணன் மீனாட்சி சீரியல் ஜோடி!

  குறிப்பாக தாமரை லட்சக்கணக்கில் பணத்தை எடுத்து கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பு கிடைத்தும், பாதியில் போக மாட்டேன், இறுதி வரை விளையாடுவேன் என்று காட்டிய உறுதி அவர் மீதான மரியாதையை அதிகமாக்கியது.இதனால் தாமரை செல்வியை ரசிகர்கள் தூக்கி கொண்டாடினார்கள். இவருக்கும் பிரியங்காவுக்குமான சண்டை முடியாத ஒன்று. தாமரை செல்வியை மிஸ் செய்ய விரும்பாத விஜய் டிவி அவருக்கு பிக்பாஸ் அல்டிமேட்டிலும் வாய்ப்பு கொடுத்தது.

  அதன் பின்பு பிபி ஜோடிகள் சீசன்2 வில் தனது கணவருடன் டான்ஸ் ஆடி கலக்கினார்.. ஃபைனல்ஸ் வரை வந்த தாமரை செல்வியை நடுவர் ரம்யா கிருஷ்ணன் பாராட்டாத எபிசோடுகளே இல்லை. இவரிடம் நடனம், நடிப்பு என பல திறமைகள் இருப்பதாக அடிக்கடி கூறுவார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.


  இந்நிலையில் தாமரை செல்வி வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கியுள்ளார். ’மூவி ஷூட்டிங்’ என்ற கேப்ஷன் கொடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை தாமரை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் தாமரையுடன் நடிகர் ரோபோ ஷங்கர் மற்றும் சிங்கம் புலி ஆகியோர் இருக்கிறார்கள். தாமரை நடிக்கும் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv