• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Thalattu: ஸ்ருதி ராஜ் - கிருஷ்ணா நடிப்பில் சன் டிவி-யின் புதிய சீரியல்!

Thalattu: ஸ்ருதி ராஜ் - கிருஷ்ணா நடிப்பில் சன் டிவி-யின் புதிய சீரியல்!

தாலாட்டு சீரியல்

தாலாட்டு சீரியல்

சின்னத்திரை பிரபலங்கள் கிருஷ்ணா மற்றும் ஸ்ருதி ராஜ் நடிப்பில் ’தாலாட்டு’ எனும் புதிய சீரியல் சன் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

  • Share this:
    சின்னத்திரை பிரபலங்கள் கிருஷ்ணா மற்றும் ஸ்ருதி ராஜ் நடிப்பில் ’தாலாட்டு’ எனும் புதிய சீரியல் சன் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

    நடிகர்கள் ஸ்ருதி ராஜ் மற்றும் கிருஷ்ணாவின் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. அது என்னவென்றால், ‘தாலாட்டு’ எனும் புதிய சீரியலில் இவர்கள் இணைந்து நடிக்கிறார்கள். இருவரும் தங்கள் புதிய சீரியலால் உற்சாகமாக உள்ளனர். இந்த சீரியலின் ப்ரோமோ ஏப்ரல் 14 அன்று தங்கள் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் சன் டிவி ஒளிபரப்பியது.

    கிருஷ்ணா மற்றும் ஸ்ருதி ராஜ் இருவரும் தங்களது சமூக வலைதலங்களில் ‘தாலாட்டு’ சீரியலின் ப்ரோமோவைப் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். ‘தாலாட்டு’ சீரியலில், ஸ்ருதியை சந்தோஷமாக திருமணம் செய்து கொண்டு, ஒரு மகனைப் பெற்றிருக்கும் விஜய் வேடத்தில் கிருஷ்ணா நடிக்கிறார்.



    தியா மேனன், நிவாஷினி திவ்யா, சஹானா ஷெட்டி, காயத்ரி ஜெயராமன், அரவிந்த் கதரே உள்ளிட்ட பலரிடமிருந்து கிருஷ்ணா மற்றும் ஸ்ருதி ஆகியோருக்கு வாழ்த்துகள் குவிந்துள்ளன.

    ‘தாலாட்டு’ சீரியலில் ‘ரன்’ மற்றும் ‘தெய்வமகள்’ புகழ் கிருஷ்ணா, அழகு சீரியல் புகழ் ஸ்ருதி ராஜ், செம்பருத்தி புகழ் பரதா நாயுடு, தர்ஷிகா தர்ஷி, ஈஸ்வர் ரகுநாதன், விதுஷ் சவுத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். நிகழ்ச்சி குறித்த பிற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: