Home /News /entertainment /

4 கார் இருக்கும் போது எதுக்காக சைக்கிள்ல போனீங்க? நெல்சன் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்!

4 கார் இருக்கும் போது எதுக்காக சைக்கிள்ல போனீங்க? நெல்சன் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்!

விஜய்

விஜய்

‘ஒரு குட்டி ஸ்டோரி சொல்லுங்க சார்’ என நெல்சன் கேட்க, ‘இப்போ எதுவும் ஸ்டாக் இல்லயே’ என்கிறார் விஜய்.

    சன் டிவி-யில் விஜய் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சியின் அட்டகாசமான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

    காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ லிரிக் வீடியோ வெளியானது. அதன் ப்ரோமோவில் இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகரும், அரபிக் குத்து பாடலாசிரியரான சிவகார்த்திகேயனும் இடம் பெற்றிருந்தனர். அவர்களுடன் ஃபோனில் பேசியிருந்தார் விஜய். இது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. பின்னர் பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா என்ற பாடல் வெளியானது. விஜய் பாடியிருந்த இந்தப் பாடல் இணையத்தில் படு வைரலானது.

    ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பீஸ்ட் திரைப்படம் வரும் எப்ரல் 13-ம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முன்னதாக படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடைப்பெறவில்லை. அதனால் விஜய்யின் மேடைப் பேச்சை மிஸ் பண்ணுவதாக சோகமானார்கள் அவரது ரசிகர்கள்.

    வீட்டில் பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொன்ன யாஷிகா ஆனந்த் - விரைவில் டும் டும் டும்!

    இதையடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியாக்கும் நோக்கில், சன் டிவி-யின் சிறப்பு நிகழ்ச்சி ஒயேன்றில் விஜய் கலந்துக் கொண்டிருப்பதாகவும், அந்நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் எனவும் முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் விஜய்யின் நேர்க்காணலை இயக்குநர் நெல்சன் திலீப் குமாரே தொகுத்து வழங்குகிறார்.

    பீஸ்ட் ட்ரெய்லருக்கே இந்த கூட்டமா? - அசந்துபோன திரையரங்கு!

    இந்நிலையில் தற்போது அந்நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது சன் டிவி. அதில் ‘ஒரு குட்டி ஸ்டோரி சொல்லுங்க சார்’ என நெல்சன் கேட்க, ‘இப்போ எதுவும் ஸ்டாக் இல்லயே’ என்கிறார் விஜய். ‘இதெல்லாத்தையும் தனியா கேக்க வேண்டியது தானேங்குறீங்களா’ என நெல்சன் கேட்க, ‘ஷூட்டிங் முடிஞ்சிடுச்சிங்கற தைரியத்துல யூ ஆர் ஆஸ்கிங் ஆல் திஸ் டூ மீ’ என சிரிக்கிறார் விஜய். இரண்டாவது ப்ரோமோவில், ஜாலியோ ஜிம்கானா பாடலைப் பாடும் விஜய், 4 கார்கள் இருக்கும் போது எதற்காக ஓட்டு போட சைக்கிளில் சென்றார் என்பதற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார்.





    நீண்ட காலமாக விஜய்யின் நேர்க்காணலை பார்க்க வேண்டும் என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்நிகழ்ச்சி நிச்சயம் விருந்து தான் என்பதில் சந்தேகமில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Beast, Sun TV

    அடுத்த செய்தி