• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Vijay-Udhayanidhi Stalin: மீண்டும் உதயநிதியுடன் கைகோர்க்கும் விஜய்?

Vijay-Udhayanidhi Stalin: மீண்டும் உதயநிதியுடன் கைகோர்க்கும் விஜய்?

விஜய் - உதயநிதி

விஜய் - உதயநிதி

இதற்கு முன்பு விஜய், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்த குருவி படத்தில் நடித்திருந்தார்.

  • Share this:
    13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய் - உதயநிதி கூட்டணி இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    விஜய் தற்போது நெல்சன் திலீப் குமாரின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதற்கடுத்து தெலுங்கு மற்றும் தமிழில் நேரடியாக வெளியாகும் படத்தில் நடிக்கிறார் விஜய். தளபதி 66 என அழைக்கப்படும் இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடியப்பள்ளி இயக்குகிறார்.

    இந்நிலையில் நடிகரும், தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதியை தொடர்புக் கொண்டு பேசிய நடிகர் விஜய், அவருடன் இணைந்து பணியாற்றும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடிப்பார் எனத் தெரிகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. அது தளபதி 67 அல்லது தளபதி 68-ஆக இருக்கும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    இதற்கு முன்பு விஜய், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்த குருவி படத்தில் நடித்திருந்தார். உதயநிதி தயாரித்த முதல் படமும் இது தான். இதையடுத்து 13 ஆண்டுகள் கழித்து இந்த கூட்டணி இணைவதை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: