Home /News /entertainment /

பிக் பாஸ் பார்த்துட்டு விஜய் என்ன சொன்னார்? வெளிப்படையாக கூறிய சஞ்சீவ் வெங்கட்!

பிக் பாஸ் பார்த்துட்டு விஜய் என்ன சொன்னார்? வெளிப்படையாக கூறிய சஞ்சீவ் வெங்கட்!

சஞ்சீவ் வெங்கட்

சஞ்சீவ் வெங்கட்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னும், சென்று வந்த பிறகும் விஜய் தன்னிடம் என்ன கூறினார் என்பதை பற்றி வெளிப்படையாக பேசி உள்ளார் சஞ்சீவ்.

  எந்தவொரு பிக் பாஸ் சீசன் உடனும் ஒப்பிட முடியாத அளவிற்கு, சிறப்பாக நடந்து முடிந்தது விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5. இந்த சீசனில் பெரும்பாலான மக்களின் மனதை கவர்ந்தவர்களில் - சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை  நடிகர் சஞ்சீவ்வும் ஒருவர் ஆவார்.

  இன்னும் சொல்லப்போனால் "அட ச்சே.. இவர் ஏன் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக 50 நாட்கள் கழித்து வந்தார். முதலிலேயே வந்து இருந்தால்.. பிக் பாஸ் சீசன் 5 இன்னும் சூடு பிடித்து இருக்கும்; இன்னும் அருமையாக சென்று இருக்கும்!" என்று கூறாத ஆட்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு "நியாயம் டா.. நேர்மை டா.." என்று ஒரு மினி பஞ்சாயத்து தலைவராகவே நடந்து கொண்டார். அதே சமயம் மிகவும் சென்ட்டிமென்டான ஒரு நபராகவும் அனைவருடனும் பழகினார், குறிப்பாக டைட்டில் வின்னர் ராஜு உடன்!

  இவர் எவ்வளவு சென்ட்டிமென் ஆள் என்றால், டைட்டில் வின்னர் ஆவதை பற்றியெல்லாம் அவர் கவலைப்படவே இல்லை. தன் குடும்ப நபர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து தன்னை பார்க்கும் வரை உள்ளே இருந்தால் போதும்" என்பதற்காகவே தீயாக விளையாடினார். சோகமான விஷயம் என்னவென்றால், அவரின் கணிப்பு படியே, குடும்பத்தினர்கள் வந்து பார்த்து சென்ற அடுத்த எலிமேஷனிலேயே சஞ்சீவ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டர்.

  இதையும் படிங்க.. திருமண வதந்திகளுக்கு தமன்னா பதிலடி!

  ஒருவேளை அவரின் ஆசை நிறைவேறி விட்டது, மற்றவர்களுக்கு சப்போர்ட் செய்வோம் என்று நினைத்து மக்கள் சஞ்சீவுக்கு ஒட்டு போடாமல் விட்டு இருக்கலாம். அதனால் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கலாம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் முன்பே சஞ்சீவ் ஒரு பிரபலம் தான். சின்னத்திரை, வெள்ளித்திரை புகழை தாண்டி அவர் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பதும் அவரின் பிரபலத்தன்மைக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். தளபதி விஜய் மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் இணைந்து சில திரைப்படங்களும் நடித்துள்ளனர்.

  இந்நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு சஞ்சீவ் அளித்துள்ள பேட்டி ஒன்றில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னும், சென்று வந்த பிறகும் விஜய் தன்னிடம் என்ன கூறினார் என்பதை பற்றி வெளிப்படையாக பேசி உள்ளார். விஜய் கிட்ட முதலில் சொல்லும் போது சிரிச்சான். பிக்பாஸுக்குள்ள போய் நீ சமாளிச்சுடுவீயா? என்று கேட்டான். பிறகு "கூப்பிடுறாங்க! போறேன், போயி என்னதான் நடக்குதுனு பார்ப்போம்" என்று கூறினேன்.

  இதையும் படிங்க.. பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் குண்டு கல்யாணம்! வாய்ப்பு தந்த விஜய் டிவி

  அதற்கு விஜய், "என்னத்துக்கு கூப்பிடுறாங்க? உள்ள போயி என்ன பண்ணுவ நீ?" என்று கேட்டாராம். அதற்கு சஞ்சீவ், "முடிஞ்ச அளவுக்கு ஜாலியா இருப்பேன், ஏதாச்சு பிரச்சினை என்றால் நாமளும் பண்ண வேண்டியது தான்" என்று பதில் கூறினாராம். பின்னர் "என்ன தோணுதோ.. அதை பண்ணி.. ஒரு கலக்கு கலக்கிட்டு வா! ஆல் தி பெஸ்ட்" என்றாராம் தளபதி விஜய். பின் வெளியே வந்ததும் "நீ உள்ளே போன போது எப்படி போனீயோ அது வேற.. நீ வெளிய வரும் போது ரொம்ப நல்ல பெயரோட வெளிய வந்து இருக்கனு எல்லாருமே சொல்றாங்க. நீ போனதால நானும் ஷோவை கொஞ்சம் ரெகுலரா பார்த்தேன். உன் கேம் நல்லா இருந்துச்சு!" என்றும் கூறினாராம் விஜய்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

  அடுத்த செய்தி