• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக் பாஸ் 5-ல் விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ் - ஆதரவு தருவார்களா தளபதி ஃபேன்ஸ்?

பிக் பாஸ் 5-ல் விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ் - ஆதரவு தருவார்களா தளபதி ஃபேன்ஸ்?

விஜய் - சஞ்சீவ்

விஜய் - சஞ்சீவ்

பிக் பாஸில் மூன்றாவது வைல்டு கார்டு எண்ட்ரியாக நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் உள்ளே நுழைந்துள்ளார்.

  • Share this:
    விஜய் டிவியில் 50 நாட்களை கடந்து வெற்றி நடைபோடும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. முன்பை காட்டிலும் இப்போது தான் பல்வேறு சுவாரஸ்யமான திருப்பங்களை கொண்டுள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், தற்போது 6 பேர் வெளியேறி விட்ட நிலையில் மீதமுள்ள போட்டியாளர்களுடன் தொடர்கிறது. இதில் அவ்வப்போது வைல்டு கார்டு எண்ட்ரியாக ஒரு சிலர் உள்ளே வந்த வண்ணம் இருக்கின்றனர்.

    இது எல்லா சீசனிலும் நடைபெற்ற ஒன்று தான். என்றாலும் கூட இப்படி வைல்டு கார்டு எண்ட்ரியாக வருபவர்கள் தான் பிக் பாஸ் வீட்டில் சிறப்பான முறையில் பல திருப்பங்களை தந்துள்ளனர். வைல்டு கார்டில் வருபவர்கள் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு எல்லா சீசனிலும் இருந்ததுண்டு. அதே போன்று இந்த ஐந்தாவது சீசனில் ரீ-எண்ட்ரியாக பிக் பாஸ் போட்டியாளர் அபிஷேக் ராஜா, முதல் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தார். அவரை தொடர்ந்து கோரியோகிராபர் அமீர் பிக் பாஸ் வீட்டுக்குள் இரண்டாவது வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்தார்.

    தற்போது மூன்றாவது வைல்டு கார்டு எண்ட்ரியாக நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் உள்ளே நுழைந்துள்ளார். சின்னத்திரையில் தனக்கான முக்கிய அங்கீகாரத்தை உருவாக்கி வைத்துள்ளவர் சஞ்சீவ். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர் பணிபுரிந்துள்ளார். சஞ்சீவ் நடித்த முக்கிய சின்னத்திரை நாடகங்களான கண்மணி (கண்ணனாக நடித்திருந்தார்), மெட்டி ஒலி (இளங்கோவாக நடித்திருந்தார்), அண்ணாமலை (விநாயகமாக நடித்திருந்தார்), திருமதி செல்வம் (செல்வமாக நடித்திருந்தார்) போன்றவற்றில் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். மேலும் இவர் 2007 - 2013 ஆம் ஆண்டு வரை 'மானாட மயிலாட' நடன நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தார்.

    இத்துடன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' நாடகத்தில் முத்தரசாக நடித்து புகழ்பெற்றுள்ளார். சமீபத்தில் சித்தி 2 நாடகத்தில் திருநாவுக்கரசாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இப்படி பல சிறப்புகளை கொண்டதுடன், விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பதாலும் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக ரசிகர்கள் பட்டாளம் நிச்சயம் உருவாக போகிறது.

    பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்துள்ளார். இதையடுத்து சின்னத்திரை பிரபலங்களும் சஞ்சீவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இனி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரஸ்யமான திருப்பங்கள் வரப்போகிறது என்பது உறுதி.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: