முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''எதிர் வீட்டு ஆசிரியர் எனக்கு தொல்லை கொடுத்தார்'' - தாடி பாலாஜி மனைவி பகீர் குற்றச்சாட்டு

''எதிர் வீட்டு ஆசிரியர் எனக்கு தொல்லை கொடுத்தார்'' - தாடி பாலாஜி மனைவி பகீர் குற்றச்சாட்டு

தாடி பாலாஜியின் மனைவி நித்யா

தாடி பாலாஜியின் மனைவி நித்யா

தன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் கடந்த சில ஆண்டுகளாக பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவரைப் பிரிந்து நித்யா தனியாக சென்று மாதவரம், சாஸ்திரி நகர் எக்ஸ்டன்ஷன், இரண்டாவது குறுக்கு தெரு பகுதியில் தனது குழந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் எதிர்வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி என்பவரின் காரை சேதப்படுத்தியதாகக் கூறி கடந்த 27ஆம் தேதி மாதவரம் போலீசார் "பிறர் சொத்துக்கு சேதம் விளைவித்தல்" என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நித்யாவை கைது செய்து பின்னர் காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

இந்நிலையில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா தன் மீது எந்தவிதமான தவறும் இல்லை எனவும் மாதவரம் போலீசார் தன்னை பழி வாங்குவதாகவும் கூறி, மாதவரம் போலீசார் மீதும் ஓய்வு பெற்ற ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் ஒரு சிங்கிள் பேரண்டாக தனியாக வசித்து வருவதால் எதிர் வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும் வேண்டுமென்றே தன் மீது புகார் அளித்ததாகவும் தெரிவித்தார்.

கடந்த 14 ஆம் தேதி இரவு தான் துணிவு படம் பார்த்துவிட்டு வந்தபோது தனது கார் சாவி காணாமல் போனதாகவும் அதனால் அவர் கார் அருகே சென்று தனது கார் சாவியை தேடியதாகவும் தெரிவித்தார். எதிர் வீட்டில் வசிக்கும் மணி குடும்பத்தினருக்கும் தனக்கும் கார் பார்க்கிங் பிரச்னை இருந்து வந்ததால் அவர்கள் தன்னை அசிங்கமாக பேசி அடிக்கடி சண்டைக்கு வந்ததாகவும் இந்த நிலையில் அவர்கள் வீட்டின் அருகே தான் சென்றதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு காவல் நிலையத்தில் காரை சேதப்படுத்தியதாக புகார் கொடுத்ததாகவும் நித்யா தெரிவித்தார்.

மேலும், மாதவரம் போலீசார் அவர்களுக்கு மட்டுமே சாதகமாக செயல்பட்டதாகவும் தனது தரப்பு நியாயத்தை கேட்கவில்லை எனவும் தன்னை பழிவாங்கும் நோக்கில் வழக்கு பதிவு செய்ததாகவும் தெரிவித்தார். இதனால் தன் பக்கம் நியாயத்தை கேட்காமல் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மீதும் தனக்கு தொல்லை கொடுத்து வரும் ஆசிரியர் மணி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணைய அலுவலகத்தில் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

First published:

Tags: Crime News