Home /News /entertainment /

எலிமினேட் ஆனாலும் நக்கல் குறையாத தாடி பாலாஜி; ஜூலியை வச்சி செஞ்சிட்டார்!

எலிமினேட் ஆனாலும் நக்கல் குறையாத தாடி பாலாஜி; ஜூலியை வச்சி செஞ்சிட்டார்!

BB Ultimate

BB Ultimate

Bigg Boss Tamil Ultimate | இந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டிற்கு ஒரு புதிய வைல்ட் கார்டு போட்டியாளர் நுழையலாம் என்றும் அரசல் புரசலாக தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளது. ஆனால் அது யார் என்கிற விவரங்கள் இல்லை.

முன்னதாக நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் "ராஜுவும், பிரியங்காவும் தான் - ஃபைனல்ஸிட், இந்த ரெண்டு பேருல ஒருத்தர் தான் பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர்" என்பதை பலரும் கணித்து விட்டனர் என்றே கூறலாம். அப்படிதான் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் இருக்கும் என்றெண்ணி பலரும் தங்களது கருத்துக்களை கட்டவிழ்த்து விட்டாலும் கூட பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கணிக்கவே முடியவில்லை என்று தான் கூற வேண்டும்.

பிபி அல்டிமேட் ஷோவின் ஆரம்பத்திலேயே வனிதா விஜயகுமாருக்கு கிடைத்த மரியாதை, சலுகைகள் மற்றும் அவரின் நடவடிக்கைகளை எல்லாம் வைத்து பார்த்த போது, பிக் பாஸ் அல்டிமேட் டைட்டிலை வனிதாவிற்கு கொடுக்கத்தான் இந்த ஷோவே நடக்கிறது என்கிற எண்ணமெல்லாம் கிளம்பியது. ஆனால் அது வெறும் கணிப்பாகவே கடந்து சென்றது. அதிகாரம் மிக்க குரலில் கட்டளைகளை போடும் பிக் பாஸ் கொஞ்சம் கீழே இறங்கி வந்து, வனிதாவிற்கு நிறைய அட்வைஸ்களை, சலுகைகளை வழங்கிய போதிலும் கூட அவர் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டை விட்டு - தானாக முன்வந்து வெளியேறினார்.

இதனால் வனிதாவின் வம்பு தும்புகளுக்காகவே பிபி அல்ட்மேட் பார்த்துக்கொண்டு இருந்த ரசிகர்கள் 'அப்செட்' ஆகினர். வனிதாவின் வெளியேற்றம் பேசுபொருளாகி முடிவதற்குள் நிகழ்ச்சியின் ஆணிவேராக கருதப்படும் நடிகர் கமல்ஹாசன் "திரைப்பட ஷூட்டிங் காரணமாக பிக் பாஸ் அல்டிமேட் ஷோவை இனிமேல் தொகுத்து வழங்க மாட்டார்" என்கிற தகவலும் வெளியானது.

அவ்ளோதான் பா... பிக் பாஸ் அல்டிமேட் ஷோவின் கதை முடிந்தது என்று பலரும் எண்ண தொடங்கிய நேரத்தில் தான், கமலுக்கு பதிலாக இனிமேல் நடிகர் சிலம்பரசன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்கிற அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது. அதன் பிறகு, முன்னெப்போதை விடவும் பிக் பாஸ் அல்டிமேட் ஷோ மீதான எதிர்பார்ப்பு எகிறியது; நிகழ்ச்சியோடு சேர்த்து, சிம்புவின் தொகுப்பாளர் பணியும் சிறப்பாக சென்ற வண்ணம் உள்ளது.இந்நிலைப்பாட்டில், பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து நகைச்சுவை நடிகர் பாலாஜி நேற்று எலிமினேட் ஆனார். கடந்த சில நாட்களாகவே தாடி பாலாஜி உடல்நிலை சரி இல்லை என்று கூறிக்கொண்டும், எதிலும் பங்கு கொள்ளாமலும், அவ்வப்போது சக போட்டியாளர்களிடம் சண்டை போட்டுக்கொண்டும், கொஞ்சம் விலகியே இருந்தார். இதற்கிடையில் தான் அவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். தாடி பாலாஜியின் எலிமினேஷன் மற்றொரு போட்டியாளரான சினேகனை மட்டுமே கவலைக்குள் ஆழ்த்தியது; அவர் மட்டுமே தாடி பாலாஜிக்காக கண்ணீர் விட்டார். மற்ற போட்டியாளர்கள் சந்தோஷமாக அவரை வீட்டை விட்டு வெளியே வழியனுப்பினர்.

Also Read : செல்வராகவன் படத்தைப் பகிர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன விஷயம்

எலிமினேட் ஆகி சிம்புவிடம் பேசும் போது, "நான் இங்கே பலருடன் இருந்து பழகிவிட்டேன். வீட்டுக்கு சென்று தனியாக தான் இருக்க வேண்டும்" என வேதனையுடன் கூறினார் தாடி பாலாஜி. உடனே "நாங்க எல்லோரும் இருக்கோம், எப்போ வேண்டுமானாலும் நீங்க என் வீட்டுக்கு வரலாம்" என்று கூறி சிம்பு அவரை கூலாக்கினார், பிறகு தாடி பாலாஜி கிளம்பும் முன் ஜூலி 'மிஸ் யு அண்ணா'என்று கத்த, "எப்படியும் நான் போன பிறகு டான்ஸ் தான் ஆட போற" என்று தரமாக கலாய்த்து விட்டே வந்தார் தாடி பாலாஜி.

Also Read : அன்று பார்த்த அதே அழகில் சோனியா அகர்வால் - லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

இந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டிற்கு ஒரு புதிய வைல்ட் கார்டு போட்டியாளர் நுழையலாம் என்றும் அரசல் புரசலாக தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளது. ஆனால் அது யார் என்கிற விவரங்கள் இல்லை.
Published by:Selvi M
First published:

Tags: Balaji, Bigg boss Julie, Bigg Boss Tamil, Entertainment

அடுத்த செய்தி