தனது மகளை, தன் மனைவியிடம் இருந்து மீட்டு தருமாறு தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் நடிகர் தாடி பாலாஜி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்தியாவிற்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களது 12 வயது மகள் தாடி பாலாஜி மனைவியிடம் வளர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் அவரது மகள், மனைவி நித்யாவின் தவறான வழிகாட்டுதலால் சமூக வலைதளத்தில் காணொலி பதிவிடுவதாகவும், இதனால் அவரது படிப்பு பாதிக்கப்படுவதாகவும் புகார் கூறியுள்ள தாடி பாலாஜி, நித்யாவை பற்றி தனக்கு எந்த கவலையும் இல்லை. அவர் வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளட்டும். ஆனால் என் மகளின் வாழ்க்கை வீணாவதை தன்னால் பார்த்து கொண்டிருக்க முடியாது என்று கூறினார். மகளை, மனைவி நித்யாவிடமிருந்து மீட்டு தருமாறு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் மனு அளித்திருக்கிறார்.
சன் டிவி நிகழ்ச்சியில் விஜய்... தொகுப்பாளர் யாருன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!
தன்னுடைய மனைவி தன்னைப்பற்றி தன்னுடைய மகளை வைத்து அவதூறாக கருத்துக்களை பேசி, அதன் மூலம் தன்னை மிரட்டி பணம் கேட்பதாகவும் தாடி பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.