சீரியல் நடிகை தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் - டார்ச்சர் செய்தது யார்?
சின்னத்திரை நடிகை தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
- News18 Tamil
- Last Updated: September 10, 2020, 12:43 PM IST
மனசு மமதா, மௌனராகம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரவானி. இவர் கடந்த 8 வருடங்களாக தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். ஹைதராபாத் மதுராநகரில் உள்ள வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்தார்.
செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் போலீசுக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஐதராபாத் போலீசார், ஸ்ரவானியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கான காரணம் குறித்து குடும்பத்தினரிடம் விசாரித்தனர். விசாரணையில், ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் ரெட்டி. இவர் சமீபத்தில் தடை செய்யப்பட்ட டிக் டாக்கில் பிரபலமானவர். ஸ்ரவானிக்கு, தேவராஜ் டிக்டாக் மூலம் அறிமுகமாகியுள்ளார். அடிக்கடி இருவரும் இணைந்து பல காதல் வசனங்களுக்கு டிக்டாக் செய்துள்ளனர். மேலும் டூயட் பாடல்களுக்கும் டிக்டாக் செய்திருக்கின்றனர். நாளடைவில் இருவருக்கும் இடையிலான நட்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தும் வந்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரவானிக்கும் தேவராஜூக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தேவராஜை விட்டு ஸ்ரவாணி விலகியதாக கூறப்படுகிறது.
தீடிரென காதலர் தேவராஜ் நடிகை ஸ்வரானியை பிளாக்மெயில் செய்யத் தொடங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஸ்ரவானியை துன்புறுத்தியதாகவும் அவரின் குடும்பத்தார் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். தேவராஜ் போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி மிரட்டியதாகவும், இதனால் தங்களின் மகள் பயத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
தேவராஜின் மிரட்டலால்தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசில் புகார் அளித்தனர். புகாரை பெற்ற போலீசார் தேவராஜ் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தான் ஸ்ரவானியை டார்ச்சர் செய்யவில்லை என்றும், அவரது பெற்றோரும் சாய் என்ற இளைஞரும்தான் டார்ச்சர் செய்ததாக கூறியுள்ளார்.கடந்த 7-ம் தேதி சாய் தன்னை சந்திக்க வர வேண்டும் என நடிகையை அழைத்ததாகவும் அதனால் மன உளைச்சலில் இருந்ததாகவும் தேவராஜ் கூறியுள்ளார். தேவராஜினின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார், பெற்றோர் மற்றும் சாய் என்ற அந்த நபரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையின் முடிவிலேயே நடிகையின் தற்கொலைக்கு யார் காரணம் என தெரியவிரும் என்கின்றனர் போலீசார்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் போலீசுக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஐதராபாத் போலீசார், ஸ்ரவானியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கான காரணம் குறித்து குடும்பத்தினரிடம் விசாரித்தனர். விசாரணையில், ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் ரெட்டி. இவர் சமீபத்தில் தடை செய்யப்பட்ட டிக் டாக்கில் பிரபலமானவர். ஸ்ரவானிக்கு, தேவராஜ் டிக்டாக் மூலம் அறிமுகமாகியுள்ளார். அடிக்கடி இருவரும் இணைந்து பல காதல் வசனங்களுக்கு டிக்டாக் செய்துள்ளனர். மேலும் டூயட் பாடல்களுக்கும் டிக்டாக் செய்திருக்கின்றனர்.