பிரபல தெலுங்கு சின்னத்திரை நடிகை மைதிலி கட்டா தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகை மைதிலி சில தினங்களுக்கு முன்னர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டாவில் திங்கள்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. திங்கட்கிழமை மாலை மைதிலி, பஞ்சகுட்டா காவல்துறைக்கு போன் செய்து தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. அதோடு தனது கணவரின் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும், இல்லையெனில் தற்கொலை செய்துக் கொள்வேன் என அவர் கூறியதாகவும் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து பிரீசர் எனப்படும் ரம் வகையை சேர்ந்த 8 பாட்டில் மதுபானத்துடன் தூக்க மாத்திரைகளை சேர்த்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுபற்றிய தகவல் பஞ்ஜகுட்டா காவல் நிலையத்திற்கு கிடைத்தது. இதையடுத்து மைதிலியின் தொலைபேசி சிக்னலை வைத்து அவரது வீடு இருக்கும் பகுதியை கண்டறிந்து உடனடியாக போலீசார் அங்கு சென்றனர். அப்போது வீட்டில் மைதிலி சுயநினைவற்ற நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட போலீசார் அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அப்படிப்போடு முதல் அண்டங்காக்கா கொண்டக்காரி வரை - கேகே-வின் சிறந்த தமிழ் பாடல்கள்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதற்கிடையே கடந்தாண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் தனது கணவர் ஸ்ரீதர் ரெட்டி மற்றும் 4 பேருக்கு எதிராக துன்புறுத்தல் புகார் அளித்திருந்தார் மைதிலி. இந்த வழக்கில் தற்போது முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளது. இதேபோன்று சூரியபேட்டை மாவட்டத்தில் உள்ள மோத்தி காவல் நிலையத்திலும், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக மைதிலி புகார் அளித்து உள்ளார். வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.