Home /News /entertainment /

மாமியாருடன் குத்தாட்டம் போட்ட நக்‌ஷத்ரா! - வைரல் வீடியோ

மாமியாருடன் குத்தாட்டம் போட்ட நக்‌ஷத்ரா! - வைரல் வீடியோ

நக்‌ஷத்ரா நாகேஷ்

நக்‌ஷத்ரா நாகேஷ்

Tamizhum saraswathiyum Nakshathra : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தற்போது தமிழுக்கும் சரஸ்வதிக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நிச்சயர்தார்த்த சீக்வென்ஸில் நக்‌ஷுத்ரா தன் மாமியார் புடவையை கட்டியிருப்பதாக இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.

மேலும் படிக்கவும் ...
சன் டிவியில் தொகுப்பாளினியாக தன் திரைப்பயணத்தை தொடங்கிய நக்‌ஷத்ரா நாகேஷ், தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அடிக்கடி வெள்ளித்திரையிலும் முகம் காட்டுகிறார்.  இவர் நடித்த குறும்படங்களும் பிரபலமானவை.

படபடவென பேசுவது தான் நக்‌ஷத்ராவின் தனித்துவம். தொகுப்பாளினியாக அவர் வெற்றிபெற காரணமும் அதுதான்.  தற்போது விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான ’தமிழும் சரஸ்வதி’’ தொடரில் சரஸ்வதி என்னும் கேரக்டர் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

கடந்தாண்டு மே மாதம் தன் காதல் குறித்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டார். முதன்முறையாக தன் காதலர் ராகவ்வை இன்ஸ்டா ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். நக்‌ஷத்ராவின் காதல் கணவர் ராகவ், மெடிஃபோகஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்ட என்னும் நிறுவனத்தின் இயக்குனர். மேலும் தியேட்டர்காரன் என்னும் தியேட்டர் நாடக குழுவின் இணை நிறுவனர்.

நக்‌ஷத்ராவுக்கும் ராகவுக்கும் பள்ளி பருவத்தில் இருந்தே நல்ல நட்பு இருந்ததாம். அது எப்போது காதலாக மாறியது என்று இருவருக்குமே தெரியாதாம். கடந்தாண்டு மே மாதம் இருவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் நிச்சர்யதார்த்தம் நடந்தது. அதன் பின்னர் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்து முடிந்தது. நக்‌ஷத்ரா இந்த புத்தாண்டை தன் காதல் கணவருடன் பாண்டிச்சேரியில் கொண்டாடியுள்ளார்.




நக்‌ஷத்ராவின் கணவர் தன் சிறுவயதில் இருந்தே நண்பர் என்பதால், அவரின் குடும்பமும் நக்‌ஷுத்ராவுக்கு ரொம்பவே நெருக்கம். ராகவ் அண்மையில் தன் குடும்பத்துடன் சேர்ந்து நக்‌ஷுத்ராவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோ யூ டியூபில் ட்ரெண்டானது.

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தற்போது தமிழுக்கும் சரஸ்வதிக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நிச்சயர்தார்த்த சீக்வென்ஸில் நக்‌ஷு தன் மாமியார் புடவையை கட்டியிருப்பதாக இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.

Tamizhum saraswathiyum serial actress Nakshathra
நக்‌ஷத்ரா


ரீல் கல்யாண நிகழ்வுக்காக ரியல் மாமியாரின் புடவையை கட்டியிருக்கிறேன் என்று இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார்.

இன்று தன் மாமியாருடன் சாமி சாமி பாடலுக்கு டான்ஸ் ஆடி இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார்.  ``தன் மகனையும் என் கையில்  கொடுத்து. மகனின் கையில் மொபலை கொடுத்து பாட்டு போட சொல்லி கூட சேர்ந்து ஆடும் மாமியார்’’ என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார் நக்‌ஷு. கூலான மாமியார், ஜாலியான மருமகள்!. செம காம்போ!



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Aswini S
First published:

Tags: Sun TV, Trending, Trending Videos, Vijay tv

அடுத்த செய்தி