தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லி சந்திரகலாவின் அனைத்து சதித்திட்டத்தையும் தமிழ் முறியடித்து வருகிறார். கூடிய விரைவில் ஆஸ்பிட்டலில் இருக்கும் கோதை அம்மாவுடன் தமிழும், சரஸ்வதியும் சேர்ந்து விடுவார்கள் என்பதை எதிர்பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் பரபரப்பான கதைக்களத்துடன் பயணித்துக் கொண்டிருக்கிறது. பிரம்மாணடமாக அரங்கேறிய
தமிழ் - சரஸ்வதி திருமணத்திற்கு பிறகு மிகப் பெரிய புயல் அவர்களின் வாழ்க்கையில் வீசிக் கொண்டிருக்கிறது. ஆயிரம் பொய் பேசி ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்ற பழமொழியை நம்பி சரஸ்வதி எம்.பி.ஏ படித்தவர் என்ற பொய்யை சொல்லி தமிழ் கோதை அம்மாவிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்குகிறார்.
இதையும் படிங்க.. தாமரையுடன் பேசினாரா சிவகார்த்திகேயன்? பிக் பாஸ் அல்டிமேட்டில் தெரிய வரும் அடுத்தடுத்த உண்மைகள்!
ஆனால் அவர்கள் சொன்ன பொய், கல்யாணம் முடிந்த அடுத்த கணமே மொத்த குடும்பத்திற்கும் தெரிந்து விட்டது. எப்படியாவது தமிழ் - சரஸ்வதி கல்யாணத்தை நிறுத்தி விட வேண்டும் என துடித்த வில்லி சந்திரகலாவுக்கு சரஸ்வதி படிக்காதவர் என்ற உண்மை தெரிந்ததும் சந்தோஷம் தாங்க முடியவில்லை.ஆனால் கோதை அம்மா, நெஞ்சு வலியில் ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆகும் நிலைக்கு வந்து விட்டார். குடும்பத்தில் ஏற்பட்ட இந்த குழப்பத்தை பயன்படுத்திக் கொண்டு கோதை அம்மாவை பழி வாங்க நினைக்கிறார் சந்திரகலா.இவர்களுடன் கோதை அம்மாவின் மூத்த மகன் கார்த்திக்கும் சேர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க.. பாட்டியை கூட விட்டு வைக்கவில்லை! மெளன ராகம் ரவீனா வீடியோவை பார்த்தீங்களா?
ஏற்கெனவே தமிழையும் சரஸ்வதியையும் சண்டை போட்டு அனுப்பி விட்டனர். இப்படி இருக்கையில் அவர்கள் நிம்மதியை கெடுக்க அடுத்த பிளான் செய்கிறார் சந்திரகலா.
சரஸ்வதி அப்பா வாங்கிய 20 லட்சம் கடனை உடனே திருப்பி கேட்கும் படி ஃபைனாசியரிடம் சொல்லிவிடுகிறார். இதனால் அவர், சரஸ்வதி அப்பா சொக்கலிங்கத்திடம் போய் சண்டை போடுகி்றார். கடைசியில் குடி இருக்கும் வீட்டை பத்திரம் செய்து தரும்படி கேட்கிறார். இந்த சதி சந்திரகலா செய்தது தான் என்பது தமிழுக்கு தெரிந்து விட்டது.
உடனே, பணத்தை நான் ஏற்பாடு செய்கிறேன் என்கிறார் தமிழ். சொல்லி வைத்த மாதிரி 20 லட்சம் பணத்தை திருப்பி தந்துவிடுகிறார். சரஸ்வதியின் மொத்த குடும்பமும் தமிழுக்கு நன்றி சொல்கிறது. இப்படியே சந்திரகலாவின் சதித்திட்டத்தை முறியடித்து கோதை அம்மாவுடன் சரஸ்வதியும் தமிழும் சேர போகும் நாளுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.