தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லி சந்திரகலா எல்லா உண்மையையும் கண்டுப்பிடித்து விட்டார். அதாவது, சித்தர் வேஷத்தில் வந்து நடித்தது ஷாக் அடித்தது என ஒவ்வொரு விஷயத்தையும் கண்டுப்பிடித்து கார்த்திக்கிடம் சொல்கிறார்.
கல்யாணத்திற்கு முன்பு சரஸ்வதியை தூக்கி வைத்து கொண்டாடிய கோதை அம்மா, இப்போது சரஸ்வதியை பயங்கரமாக வெறுக்கிறார். அதற்கு காரணம், சரஸ்வதியும் தமிழும் பொய் சொல்லி ஏமாற்றி விட்டார்கள் என்ற ஆதங்கம் தான். அதுமட்டுமில்லை சரஸ்வதியை மருமகளாக இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. வீட்டில் இருவரையும் விருந்தினர் போலவே தங்க வைத்துள்ளார். சரஸ்வதி கிச்சனில் போய் சமைக்க கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.
சீரியல் நடிகையின் குடும்ப நிகழ்ச்சியில் அப்பவே கலந்து கொண்ட பாரதி கண்ணம்மா நடிகர்! காதல் வதந்தி உண்மை தானா?
இதனால் தற்போது வீட்டில் வசு தான் சமைத்து வருகிறார். இந்த நேரம் பார்த்து வில்லி சந்திரகலாவிடம் சரவதி சபதம் போடுகிறார். 4 நாட்களில் கோதை அம்மாவிடம் பர்மிஷன் வாங்கி, கிச்சனுக்குள் செல்வேன் என்கிறார். சந்திரகலாவும் சவாலை ஏற்கிறார். அப்படி நடக்கவில்லை என்றால் சரஸ்வதி வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்கிறார். சரஸ்வதி இந்த சபதத்தில் ஜெயிக்க கூடாது என்பதற்காக கோதை வீட்டில் வந்து தங்கி இருக்கிறார் சந்திரகலா.
மிகப் பெரிய எதிர்பார்ப்பில் எதிர் நீச்சல் சீரியல்.. ஜனனிக்காக சக்தி எடுத்த முடிவு!
இந்த நேரத்தில் ஒரு நல்ல விஷயத்திற்காக தமிழின் உயிருக்கு ஆபத்து என்று கோதை குடும்ப ஜோதிடர் பொய் சொல்லி விடுகிறார். அதைக்கேட்டு கஷ்டத்துடன் கோயிலுக்கு போன கோதை அம்மாவை, சித்தர் போல் வேஷமிட்டு தமிழின் நண்பர் நமச்சி சந்தித்து அருள் வாக்கு கொடுக்கிறார். அதாவது தமிழின் உயிருக்கு ஆபத்து வராமல் தடுக்க, சரஸ்வதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி வைக்க வேண்டும், அவர் கையால சமைத்த உணவை சாமிக்கு படியல் போட வேண்டும் என்கிறார். தனது பையனுக்காக சரஸ்வதியை கிச்சனில் அனுப்ப கோதை சம்மதம் சொல்கிறார்.
அதே போல், சரஸ்வதி குடும்பத்தாரை சீதனத்துடன் தாலி கோர்க்கும் நிகழ்ச்சிக்கு வர சொல்கிறார். கோதையின் இந்த திடீர் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாத வில்லி சந்திரகலா, இதை பற்றி விசாரிக்கிறார். அப்போது தமிழுக்கு ஷாக் அடித்த விஷயம், போலி சித்தர் என ஒவ்வொரு உண்மையும் அவருக்கு தெரிய வருகிறது. இதை கார்த்திகிடம் அவசர அவசரமாக சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.