Home /News /entertainment /

கோதை மருமகள்களின் திடீர் மாற்றம்... ஷாக் கொடுத்த வசு - சரஸ்வதி!

கோதை மருமகள்களின் திடீர் மாற்றம்... ஷாக் கொடுத்த வசு - சரஸ்வதி!

வசு - சரஸ்வதி

வசு - சரஸ்வதி

வசுவும் சரஸ்வதியும் பயங்கர மாடர்னாக மாறி கலக்குகிறார்கள்.

    தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வரும் வாரத்தில் கார்த்திக் - வசு, தமிழ் - சரஸ்வதி ஜோடிகள் ஏற்காடு செல்வது போன்ற எபிசோடுகள் ஒளிப்பரப்பாகவுள்ளன.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் வெற்றிக்கரமாக ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பான திரைக்கதையுடன் பயணித்து கொண்டிருக்கும் இந்த சீரியலுக்கு எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் ரீச் கிடைத்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தீபக் ரீ என்ட்ரி ஆகியிருக்கும் இந்த சீரியல் அவருக்கு மீண்டும் ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து கொடுத்துள்ளது. அதே போல் தமிழ் - சரஸ்வதி ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளன. கதைப்படி சரஸ்வதி எம்.பி.ஏ படித்தவர் என பொய் சொல்லி கோதை அம்மாவை ஏமாற்றுகிறார் தமிழ்.

    கோபி கன்னத்தில் பளார் விட்ட ஈஸ்வரி அம்மா.. ஆடிப்போன பாக்கியா!

    கல்யாணம் முடிந்த உடனே இந்த விஷயம் கோதை அம்மாவுக்கு தெரிந்து விட்டது. பின்பு இருவரையும் வீட்டை விட்டு அனுப்பி விட்டனர். பல போராட்டம் பிரச்சனைகளுக்கு பிறகு இருவரும் இப்போது மீண்டும் கோதை அம்மாவுடன் சேர்ந்து விட்டனர். ஆனாலும் கோதை அம்மா முழு மனதுடன் இவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அவருக்கு இன்னும் சரஸ்வதி- தமிழ் மீது கோபம் இருக்கிறது. இந்நிலையில், திருமணம் ஆகி பல மாதங்கள் ஆகியும் கார்த்திக் - வசு சேர்ந்து வாழ வில்லை என்ற விஷயம் கோதை அம்மாவுக்கு தெரிய வருகிறது. இதனால் வீட்டில் பிரச்சனையும் வெடிக்கிறது.




    இப்படி இருக்கையில் கல்யாணம் ஆன புது ஜோடிகளை ஹனிமூனுக்காக வெளியே அனுப்ப நினைக்கிறார் கோதை அம்மா. அதற்காக வசு, சரஸ்வதி, கார்த்திக், தமிழ் எல்லோரும் ஏற்காடு செல்கின்றனர். இவர்கள் ஏற்காடு செல்லும் காட்சிகள் வரும் வார எபிசோடுகளில் ஒளிப்பரப்பாகும். இந்நிலையில் ஏற்காடில் வசுவும் சரஸ்வதியும் பயங்கர மாடர்னாக மாறி கலக்குகிறார்கள். கோதை அம்மா எப்போதுமே புடவை தான் கட்ட வேண்டும் என ரூல்களை வீட்டில் போட்டு வைத்துள்ளார்.




    இதிலிருந்து மாறி மாடர்ன் உடையில் வசுவும் சரஸ்வதியும் கலக்குகிறார்கள் இந்த புகைப்படங்களை #beingsaraswathi என்ற ஹாஷ்டேக்குடன் சரஸ்வதியாக நடிக்கும் நக்‌ஷத்ரா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எபிசோடுக்காக வெயிட்டிங் என கமெண்ட் செய்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி