Home /News /entertainment /

சரஸ்வதியுடன் மீண்டும் சேர்ந்த வசு.. கடுப்பில் சந்திரகலா!

சரஸ்வதியுடன் மீண்டும் சேர்ந்த வசு.. கடுப்பில் சந்திரகலா!

தமிழும் சரஸ்வதியும்

தமிழும் சரஸ்வதியும்

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சரஸ்வதி மீது வசு செம்ம கோபத்தில் இருந்தார்.

    தமிழும் சரஸ்வதியும் சீரியலின் இன்றைய எபிசோடில் சரஸ்வதியை புரிந்து கொண்டு அவருடன் மீண்டும் சேர்கிறார் வசு. இதனால் சரஸ்வதிக்கு சந்தோஷம் தாங்கல.

    தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சந்திரகலா எப்படியாவது சரஸ்வதியை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும், தமிழை அசிங்கப்படுத்த வேண்டும் என நினைக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவரின் பிளான் சொதப்ப கடைசி நேரத்தில் தமிழும் சரஸ்வதியும் தப்பித்து விடுகின்றனர். இந்த நேரத்தில் தான் கார்த்திக்கை தமிழுக்கு எதிராக திருப்பி விடுகிறார். சந்திரகலாவின் சதி வேலை தெரியாமல் கார்த்திக்கும் இப்போது அவர் சொல்வதை எல்லாம் கேட்டு தமிழுக்கு எதிராக வேலை செய்து வருகிறார். இப்படி இருக்கையில்  சரஸ்வதி மீது வசு செம்ம கோபத்தில் இருந்தார்.

    போட்டியில் ஜெயிக்க வருண் எடுத்த முடிவு.. பதறி போன சத்யா!

    சரஸ்வதி பொய் சொல்லி ஏமாற்றியதாக வசு தவறாக நினைத்து கொள்கிறார். இதனால் சரஸ்வதியிடம் பேசுவதை விட்டு விடுகிறார். இந்த விஷயம் தெரிந்து கார்த்திக்கும் சந்திரகலாவும் சந்தோஷப்படுகின்றனர். ஆனால் இந்த சந்தோஷம் ரொம்ப நேரத்திற்கு  நிலைக்கவில்லை. நமச்சி, சந்திரகலா செய்த சதி வேலையின் வீடியோவை வசுவிடம் காட்டுகிறார்.

    அதாவது பிளஸ் டூ அரியர் தேர்வில் சரஸ்வதி தூங்கி விழ வேண்டும் என மயக்க மாத்திரை கலந்து கொடுத்த விஷயத்தை அவரே உளறிய போது தமிழ் அதை வீடியோ எடுத்து வைத்தார். அந்த வீடியோவை நமச்சி வசுவிடம்  காட்ட அவருக்கு அழுகை தாங்க முடியவில்லை. தப்பு அம்மா மீது தான் என தெரிந்து கொண்டு  சரஸ்வதியை பார்க்க ஓடி போகிறார்.

    அந்த நிகழ்ச்சிக்கு சித்து - ஸ்ரேயா தான் வரவேண்டும்.. அடம் பிடிக்கும் ரசிகர்கள்!

    சரஸ்வதியிடம் பேசி சாரியும் கேட்கிறார். சரஸ்வதியும் வசுக்கு ஆறுதல் கூறி இருவரும் மீண்டும் சேர்ந்து விடுகிறார்கள். இந்த விஷயம் கார்த்திக் மற்றும் சந்திரகலாவுக்கு தெரிய வருகிறது. இருவரும் வழக்கம் போல் கடுப்பில் சரஸ்வதியை திட்டி தீர்க்கின்றனர். கோதை மருமகள்கள் இருவரும் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து கோதை அம்மா ஹாப்பி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி