Home /News /entertainment /

சந்திரகலா மகள் வசுவால் வீட்டில் வெடிக்கும் மிகப் பெரிய பிரச்சனை!

சந்திரகலா மகள் வசுவால் வீட்டில் வெடிக்கும் மிகப் பெரிய பிரச்சனை!

தமிழும் சரஸ்வதியும்

தமிழும் சரஸ்வதியும்

தமிழும் சரஸ்வதியும் சீரியல் எபிசோடில் வசுக்கு இப்படியொரு நிலைமையா? என சந்திரகலா கோபத்தில் கத்துகிறார்.

    தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுவால் கோதை அம்மா வீட்டில் மிகப் பெரிய பிரளயமே வெடிக்கிறது. இடையில் சந்திரகலா என்ட்ரி கொடுக்க தமிழும் கோபத்தில் கத்த தொடங்குகிறார்.

    தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் ஒரு சமையலால் வீட்டில் சண்டைக்கு மேல் சண்டை வெடிக்கிறது. கோதை அம்மா தமிழ் - சரஸ்வதியை மன்னித்து ஏற்றுக் கொண்டாலும் அவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்வதில்லை. இப்படி இருக்கையில் சமையல் செய்ய வேண்டும் என்பது சரஸ்வதியின் ஆசை. ஆனால் கிச்சனுக்குள் அனுமதி இல்லை என்கிறார் கோதை. எப்படியாவது கிச்சனுக்குள் போக சரஸ்வதி எவ்வளவோ முயற்சி எடுக்கிறார். ஆனாலும் கோதை அம்மா மனசு வைக்கவில்லை. இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடில் சமையல் செய்யும் அபி அவசரமாக ஊருக்கு கிளம்பி விடுகிறார். இதனால் கோதை,  வீட்டில் உள்ள எல்லோருக்கும் சமைக்க ஆரம்பிக்கிறார்.

    உழைப்புக்கு கிடைத்த வெற்றி… பிரபல விஜய்டிவி சீரியல் நடிகருக்கு தெலுங்கில் கிடைத்த வாய்ப்பு!

    ஏற்கனவே கோதைக்கு உடம்புக்கு முடியவில்லை. இதனால் தமிழ், சரஸ்வதி , கார்த்திக் எல்லோரும் கஷ்டப்படுகிறார்கள். ஒருகட்டத்தில் கோதைக்கு மயக்கம் வந்து விடுகிறது. இதனால் பதறிப்போன சரஸ்வதி நான் சமையல் செய்யட்டுமா? என்கிறார். ஆனாலும் கோதை விடாப்பிடியாக நிற்கிறார். இந்த நேரம் பார்த்து வசு, தைரியமாக முன்வந்து சரஸ்வதிக்காக சப்போர்ட் செய்கிறார். எனக்கு சமையல் வராது, சரஸ்வதி சமைக்கட்டும் என்கிறார். ஆனால் பதிலுக்கு கோதை அம்மா இனிமேல் கிச்சன் பொறுப்புகளை வசு தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என சொல்கிறார்.

    கோபி மீது பயங்கர கோபத்தில் ஈஸ்வரி அம்மா… சுயநலமாக யோசிக்கும் ராதிகா!

    பதிலுக்கு தமிழும் கோதை அம்மாவிடம், இனிமேல் நாங்கள்  வீட்டில் சாப்பிட போவதில்லை என கூறுகிறார். இப்படி வீட்டில் மாறி மாறி சண்டை நடக்க, வில்லி சந்திரகலா என்ட்ரி கொடுக்கிறார். அந்த நேரம் பார்த்து வசு சமைத்துக் கொண்டிருந்த கோபத்தில் பொங்கி வெடிக்கிறார், கோதை, வசுவை கொடுமை செய்வதாக கத்துகிறார். சமையல் செய்வது நல்லது தான் என  கோதை அம்மா பேச, அதற்குள் வசு குக்கரில் சூடு வைத்துக் கொள்கிறார். வசுக்கு இப்படியொரு நிலைமையா? என சந்திரகலா கோபத்தில் கத்துகிறார்.

    இடையில் சரஸ்வதி வந்து பேச, சந்திரகலா அவரை மட்டமாக பேசுகிறார். தமிழுக்கும் கோதை அம்மாவுக்கு கோபம் வருகிறது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிக்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி