தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழின் தம்பியாக கார்த்திக் ரோலில் நடித்து வரும் நவீனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
விஜய் டிவி சீரியல் பிரபலம் அனைவருக்கும் தனிப்பட முறையில் அதிகமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அவர்களுக்காகவே பிரபலங்களும் தங்களது சோஷியல் மீடியா பக்கத்தை எப்போதுமே ஆக்டிவாக வைத்திருக்கின்றனர். அவர்களிடம் சொல்ல விரும்புவது, சீரியல் குறித்த அப்டேட், பர்சனல் லைஃப் குறித்த அப்டே பற்றியும் அதில் பதிவு செய்வார்கள். அதை வழக்கம் போல் ரசிகர்கள் வைரலாக்கி விடுவார்கள். அந்த வகையில் தற்போது சின்னத்திரை சீரியல் பிரபல நவீனுக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதற்கு காரணம் இப்போது அவர், அழகான பெண் குழந்தைக்கு அப்பாவாகியுள்ளார்.
துபாய் சென்ற முதல்வர், சர்வதேச கண்காட்சியில் தமிழக அரங்கை திறந்து வைக்கிறார்
விஜய் டிவியில் வார நாட்களில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல் தமிழும் சரஸ்வதியும். இதில் பிரபல சீரியல் நடிகர் தீபக் தமிழ் கேரக்டரிலும், சரஸ்வதி கேரக்டரில் பிரபல டிவி ஷோ தொகுப்பாளரும், சீரியல் நடிகையுமான நக்ஷத்ரா நாகேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஒளிப்பரப்பாக தொடங்கிய சில மாதத்திலே சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் நல்ல இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் தமிழின் தம்பியாக, கோதை அம்மாவின் இளைய மகனாக நடிப்பவர் நடிகர் நவீன் வெற்றி.
கேஸ் சிலிண்டர் விலை உயர்வு – மத்திய அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..
வசுந்த்ராவின் கணவரான இவர் வில்லி சந்திரகலாவின் மாப்பிள்ளையாக சீரியலில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.சின்னத்திரையில் நேர்த்தியான நடிப்பில் தனக்கென தனி இடத்தை பிடித்து இருக்கும் நவீன் இதற்கு முன்பு சன் டிவி, விஜய் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் நவீன் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவரின் மனைவி செளமியாவுக்கு வளைக்காப்பு நடந்த புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் ஷேர் செய்து இருந்தார். அதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இப்போது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாவில் புகைப்படத்துடன் நவீன் ஷேர் செய்து உள்ளார். குழந்தையின் விரலை பிடித்தவாரே ‘சிங்கப்பெண்ணே’ என்ற கேப்ஷனில் குழந்தை பிறந்துள்ளது என தெரிவித்துள்ளார். நவீனுக்கு சின்னத்திரை பிரபலங்கள் தற்போது வாழ்த்து செய்திகளை அனுப்பி வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.