ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

24 மணி நேரத்தில் உண்மையை நிரூபிக்க போகும் சரஸ்வதி.. தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இயக்குனர் வைத்த ட்விஸ்ட்!

24 மணி நேரத்தில் உண்மையை நிரூபிக்க போகும் சரஸ்வதி.. தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இயக்குனர் வைத்த ட்விஸ்ட்!

தமிழும் சரஸ்வதியும்

தமிழும் சரஸ்வதியும்

தமிழ் - சரஸ்வதி ஜோடியை பிரிக்க வில்லி சந்திரகலா பிளான் செய்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் பரபரப்பு புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது. ஒற்றுமையாக இருக்கும் தமிழ் - சரஸ்வதி ஜோடியை பிரிக்க வில்லி சந்திரகலா பிளான் செய்தார். இந்த முறை தமிழின் அத்தை மகளை வைத்து கேம் ஆடினார். காதல் தோல்விக்கு பிறகு தற்கொலை முயற்சி செய்ய போன அத்தை மகளை தமிழ் காப்பாற்றினார். பின்பு அவருக்கு ஆறுதலாக அடிக்கடி ஃபோன் செய்து பேசினார், வீட்டுக்கும் சென்று வந்தார்.

  மனைவியுடன் வெளிநாட்டு பயணம்.. வாவ் சொல்ல வைக்கும் பிக் பாஸ் ராஜூ!

  இப்படி இருக்கையில் இந்த உறவை பற்றி தப்பு தப்பாக சரஸ்வதியின் பாட்டியிடம் போட்டுக் கொடுத்தார் சத்திரகலா. பாட்டி அவசரப்பட்டு தமிழின் அத்தை மகளை ரோட்டில் வைத்து அடித்து விடுகிறார். இந்த அசிங்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் தமிழின் அத்தை மகள், சந்திரகலா இருவரும் பிளான் செய்து தமிழை ஏமாற்ற திட்டம் போட்டனர். அதன்படி குடி போதையில் தமிழ், அத்தை மகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் அதனால் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் இடியை தூக்கி போடுகின்றனர். இதை தமிழால் தாங்கி கொள்ள முடியவில்லை.

  ' isDesktop="true" id="811466" youtubeid="M0j6iveFIP4" category="television">

  இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சரஸ்வதிக்கு இந்த விஷயம் தெரிந்து விடுகிறது. அவரும் நேரில் சென்று தமிழின் அத்தை மகளிடம் பேசுகிறார். அப்போது தான் அவருக்கு ஒரு உண்மை தெரிகிறது. இது எல்லாமே பொய் என்பதை சரஸ்வதி கண்டுப்பிடித்து விடுகிறார். அதற்குள் இந்த பிரச்சனை பெரிதாக வெடிக்கிறார். தமிழின் அத்தை வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்கிறார். அப்போது பொறுமையை இழந்து கத்தும் சரஸ்வதி இன்னும் 24 மணி நேரத்தில் உண்மையை கண்டுப்பிடிக்கிறேன் என சபதம் போடுகிறார்.

  காதல் கணவர் சித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் பரிசா.. கலக்கிய ஸ்ரேயா அஞ்சன்!

  இதுக் குறித்த காட்சிகள் புரமோவில் இடம்பெற்றுள்ளன. அடுத்த வாரத்தில் இந்த உண்மையை சரஸ்வதி கண்டுப்பிடிக்கும் காட்சிகள் சீரியலில் இடம் பெறும் என தெரிகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv