ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சீரியலில் இல்லை.. நிஜத்தில் கல்யாணத்திற்கு ரெடியான தமிழும் சரஸ்வதியும் நக்ஷத்ரா!

சீரியலில் இல்லை.. நிஜத்தில் கல்யாணத்திற்கு ரெடியான தமிழும் சரஸ்வதியும் நக்ஷத்ரா!

தமிழும் சரஸ்வதியும் நக்ஷத்ரா

தமிழும் சரஸ்வதியும் நக்ஷத்ரா

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை நக்ஷத்ரா நாகேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ரசிகர்களை கவர்ந்தவையாக இருக்கின்றன. அந்த வகையில் வார நாட்களில் இரவு 7.30 - 8 மணி வரை ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல் தமிழும் சரஸ்வதியும். இதில் பிரபல சீரியல் நடிகர் தீபக் தமிழ் கேரக்டரிலும், சரஸ்வதி கேரக்டரில் பிரபல டிவி ஷோ தொகுப்பாளரும், சீரியல் நடிகையுமான நக்ஷத்ரா நாகேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். திறமையான பேச்சு மற்றும் நடிப்பால் ஏற்கனவே சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளவர் நடிகை நக்ஷத்ரா நாகேஷ்.

சென்னையில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரமத்தில் படிப்பை முடித்தார் நக்ஷத்ரா. வீடியோ ஜாக்கியாக பொழுதுபோக்குத் துறையில் நுழைவதற்கு முன், IHM-ல் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்தார். முதன் முதலாக தந்தி டிவி-யில் வானவில் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன் பின்னர் ஜோடி நம்பர் 1 , சன் சிங்கர், சன் குடும்ப விருதுகள் உள்ளிட்ட ஷோக்களையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். அதோடு வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, மின்னலே, திருமகள், நாயகி உட்பட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் தோன்றி இருக்கிறார். 2013-ல் வெளியான சேட்டை படத்தில் பிரேம்ஜியுடன் ஒரு பாடலில் தோன்றியது தான் இவரது முதல் வெள்ளித்திரை அறிமுகம். அதன் பின்னர் வாயை மூடி பேசவும், இரும்பு குதிரை, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருக்கிறார். சின்னத்திரை, வெள்ளித்திரை தவிர பல ஷார்ட் பிலிம்களிலும் நடித்து நெட்டிசன்களின் பாராட்டையும் பெற்றுள்ளார்.


நெட்டிசன்கள் மற்றும் சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமாக இருக்கும் நடிகை நக்ஷத்ரா நாகேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். வெகு விரைவில் தனது நீண்ட நாள் காதலரை கரம் பிடிக்க உள்ளார் நடிகை நக்ஷத்ரா நாகேஷ் . கடந்த ஜனவரியில் காதலர் ராகவ்-வுடன் ஆடம்பரமான முறையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருந்த போதும், கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக உடனடியாக திருமணம் செய்து கொள்ள முடியாமல் போனதாக சோஷியல் மீடியாவில் தெரிவித்திருந்தார் நக்ஷத்ரா நாகேஷ்.

இந்நிலையில் தனது திருமணத்தை மிகவும் மகிழ்ச்சியான தருணமாக மாற்ற ப்ரீ-வெட்டிங் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் நக்ஷத்ரா நாகேஷ் - ராகவ் ஜோடி. திருமணத்திற்கு முன்பு நடத்தப்படும் சங்கீத் என்ற ஃபங்ஷனில் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் போட்டோக்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்து உள்ளார். மேலும் தற்போது Get ready for Gettimelam என கேப்ஷன் கொடுத்து தனது நலங்கு ஃபோட்டோக்களையும் வெளியிட்டுள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Vijay tv