தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இவ்வளவு நாளாக மொத்த குடும்பமும் மறைத்து வைத்திருந்த உண்மை தெரிந்து விட்டது. இதனால் இனி தமிழ் - சரஸ்வதி கல்யாணம் நடக்க வாய்ப்பு இல்லை என்பது போல் தற்போது புரமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நெடுந்தொடராக பயணித்து வருகிறது. இதில் தமிழாக நடிக்கும் நடிகர் தீபக் நீண்ட காலத்திற்கு பிறகு சின்னத்திரையில் கம்பேக் கொடுத்துள்ளார். அந்த கம்பேக்கும் அவருக்கு மிகப்[பெரிய வெற்றியை வாங்கி தந்துள்ளது.ஒளிப்பரப்பாக தொடங்கிய சில மாதத்திலே சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் நல்ல இடத்தை பிடித்துள்ளது.
அதிகம் படிக்காத தமிழ், நன்றாக படித்த பெண்ணை கல்யாணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் விதி அவருக்கு சரஸ்வதியை அறிமுகப்படுத்துகிறது. சரஸ்வதி 12 வது பாஸ் செய்யவே 10 முறை அட்டம்ட் எழுதுபவர். தடைகளை வென்று இவர்கள் இருவரும் இணைவதே சீரியலின் கதை. சரஸ்வதி எம்.பி.ஏ படித்து இருப்பதாக பொய் சொல்லிதான் இந்த கல்யாணத்திற்கு கோதை அம்மாவிடம் சம்மதம் வாங்குகிறார் தமிழ்,
இதையும் படிங்க.. கணவர் பற்றி ஏன் பிக் பாஸில் பேசவில்லை? குவிந்த கேள்விகளுக்கு பிரியங்காவின் பதில்!
அதே நேரம்,
சரஸ்வதியின் அப்பா இதற்கு முதலில் சம்மதிக்கவில்லை. அதன் பின்பு மகளின் ஆசைக்காக, தமிழுக்காக அவரும் பொய் சொல்லி விடுகிறார். இதனால் கல்யாண ஏற்பாடுகள் படு திவீரமாக நடந்து வருகிறது. பத்திரிக்கையும் அடித்து விட்டனர். சரஸ்வதி பற்றி தமிழின் அத்தைக்கு ஆரம்பத்தில் இருந்தே சந்தேகம் இருந்தது. இதனால் அவர் தொடர்ந்து சரஸ்வதியை ஃபாலோ செய்து வந்தார். எப்படியாவது தமிழ் கல்யாணம் நின்று விட வேண்டும் என்பது தான் அவரின் எண்ணம். அதற்காக வில்லியுடன் சேர்ந்து பிளான் செய்கிறார்.
இந்த நேரத்தில் தான் சரஸ்வதி டியூசன் போவது, 12 ஆவது பாஸ் செய்ய தேர்வு எழுதி இருப்பது என அனைத்து உண்மைகளும் தமிழின் அத்தைக்கு தெரிந்து விட்டது., அவரே உடனே இந்த உண்மைகளை சொல்ல வில்லிக்கு ஃபோன் செய்கிறார். இதற்குள்
தமிழும் அவரை தடுக்க வருகிறார். இதுக் குறித்த புரமோ வெளியாகி இருக்கிறது. ஒருவேளை இந்த உண்மை அனைத்தும் தெரிந்து விட்டால் தமிழ் - சரஸ்வதி கல்யாணம் நின்று விடும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.