முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நம்பவே முடியல.. தமிழும் சரஸ்வதியும் கோதை கொடுத்த ஷாக்!

நம்பவே முடியல.. தமிழும் சரஸ்வதியும் கோதை கொடுத்த ஷாக்!

தமிழும் சரஸ்வதியும்

தமிழும் சரஸ்வதியும்

மீரா கிருஷ்ணா நீண்ட இடைவெளிக்கு பின் கலைஞர் டிவியின் பொக்கிஷம் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழும் சரஸ்வதியும் சீரியல்  நடிகை மீரா கிருஷ்ணா தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோவை பார்த்து சக நடிகர்களே ஷாக் ஆகியுள்ளனர்.

விஜய் டிவி என்றாலே வித்தியாசம் தான். அது டிவி சீரியல் ஆகட்டும், ரியாலிட்டி ஷோ ஆகட்டும் ஏதாவது ஒரு வித்தியாசம் கட்டாயம் இருக்கும். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் எல்லா சீரியல்களும் வித்தியாசமான ஒன்லைன் ஸ்டோரியுடன் ஒளிப்பரப்பாகின்றன. குறிப்பாக பிரைம் டைமில் டெலிகாஸ்ட் ஆகும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் முழுக்க முழுக்க குடும்பத்தை மையப்படுத்தும் தொடராக ஒளீப்பரப்பாகி வருகிறது.  நீண்ட இடைவெளிக்கு பிறகு தீபக் இதில் லீட் ரோலில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சின்னத்திரை ஆங்கர் நக்ஷ்த்ரா நடித்து வருகிறார்.

bharathi kannamma : கஷ்டப்பட்டு பிளான் போட்ட வெண்பாவுக்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!

இருவரின் ஆன் ஸ்கீரின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களுக்கு பிடித்து போக சீரியலும் வெற்றி  வரிசையில் இணைந்து விட்டது. இந்த சீரியலில் சரஸ்வதி, தமிழ் ரோல்களை தாண்டி கோதை அம்மாவின் கதாபார்த்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதில் கோதையாக நடிப்பவர் மலையாள நடிகை மீரா கிருஷ்ணா. இதில் மாமியார் ரோல் என்றாலும் நிஜத்திலும் வயது மிகவும் குறைவு. இவருக்கு திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர். இவரின் கணவர் நடனத்துறையை சார்ந்தவர்.

கலர்ஸ் தமிழில் காஜல் பசுபதி.. மாஸான போலீஸ் ரோல் மூலம் என்ட்ரி!

மீரா கிருஷ்ணா நீண்ட இடைவெளிக்கு பின் கலைஞர் டிவியின் பொக்கிஷம் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதன்பிறகு இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது சன்டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியல். வசந்தி என்கிற கேரக்டரில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இவரது ரோலுக்கு நல்ல ரீச் கிடைத்தது. அதன் பிறகு சித்தி 2 சீரியலிலும் வில்லி ரோலில் நடித்தார். தற்போது தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வருகிறார்.


நடிப்பை தாண்டி சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீரா, அவ்வப்போது ரீல்ஸ் வீடியோ, டிக் டாக், டான்ஸ் வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில் மீரா கிருஷ்ணா அடுத்து ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகவுள்ள நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார். அந்த நிகழ்ச்சிக்காக அவர் ஸ்கூல் யூனிஃபார்மில் செம்ம ஸ்டைலாக ட்ரெஸ் செய்து, அதே கெட்டப்பில் ரீல்ஸ் வீடியோவும் செய்து இருக்கிறார். இந்த வீடியோ இன்ஸ்டாவில் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அதுமட்டுமில்லை இந்த வீடியோவில் மீராவின் டான்ஸ் மற்றும் கெட்டப்பை பார்த்த ஆங்கர் நக்‌ஷத்ரா ஷாக்கில் OMG எனவும் கமெண்ட் செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Vijay tv