Home /News /entertainment /

தமிழ் - சரஸ்வதி பக்கம் சாய்ந்த கோதை அம்மா..கடுப்பில் சந்திரகலா!

தமிழ் - சரஸ்வதி பக்கம் சாய்ந்த கோதை அம்மா..கடுப்பில் சந்திரகலா!

தமிழும் சரஸ்வதியும்

தமிழும் சரஸ்வதியும்

தமிழ் - சரஸ்வதி குடும்பத்தை மீண்டும் பிரிப்பாரா வில்லி சந்திரகலா?

    தமிழும் சரஸ்வதியும்  சீரியலில் கொஞ்சம் கொஞ்சமாக கோபத்தை எல்லாம் மறந்து கோதை அம்மா சமாதானம் ஆகி வருகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத கார்த்திக் அவரின் மாமியார் வில்லி சந்திரகலாவும்  புது பிளானை போடுகின்றனர்.

    தமிழும் சரஸ்வதியும் சீரியலின் திரைக்கதை தற்போது பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ஒருவழியாக கோதை அம்மா, கோபத்தை மறந்து தமிழ் - சரஸ்வதியை ஏற்றுக் கொண்டார்,. ஆனால் சரஸ்வதியின் குடும்பத்தை மட்டும் தான் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது சரஸ்வதி தான் மொத்த வீட்டுக்கும் சமையல் செய்கிறார். இது நடக்கவே கூடாது என்று சந்திரகலா பல திட்டங்களை போட்டார். ஆனால் கடைசியில் சபதத்தில் ஜெயித்து சரஸ்வதி சமையல் அறைக்குள் சென்று விட்டார். வசுவும் சரஸ்வதி பக்கம் நிற்கிறார். இதனால் சந்திரகலா, மருமகன் கார்த்திக்கை வைத்து எல்லாவற்றையும் சாதிக்கிறார்.

    இதையும் படிங்க.. தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 6.. ஆங்கர் யார் தெரியுமா?

    இன்றைய எபிசோடில், வெளியே போன தமிழும் - சரஸ்வதியும் கம்பெனி விஷயத்திற்காக முக்கியமான நபரை சந்திக்கின்றனர் அவரிடம் ஆர்டர் ஒன்றையும் கேட்கின்றனர். அந்த நபர், சம்மதம் சொல்ல இந்த சந்தோஷமான விஷயத்தை தமிழ், கோதையிடம் சொல்கிறார். கோதையும் ஓகே சொல்லிவிடுகிறார். இந்த பக்கம் கார்த்திக் இந்த விஷயம் தெரியாமல் சந்திரகலாவின் பேச்சை கேட்டு பிசினஸில் புது ஐடியாக்களை கொண்டு வர பிளான் போடுகிறார்.

    இதையும் படிங்க.. கணவருடன் குத்தாட்டம் போடும் பிக்பாஸ் தாமரைய பாருங்க.. வைரல் ரீல்ஸ்

    ஆனால் தமிழ் சொன்ன விஷயத்துக்கு கோதை ஓகே சொல்லிவிடுகிறார். இதனால் மீண்டும் கார்த்திக் மற்றும் தமிழுக்கு சண்டை வரும் என தெரிகிறது. கம்பெனி விஷயத்தில் எப்படியாவது தமிழை தோற்கடிக்க வேண்டும் என ஒருபக்கம் சந்திரகலா நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கோதை அம்மா தமிழ் பக்கமே நிற்கிறார். இப்போது கம்பொனி விஷயத்தில் அடுத்து என்ன ஆகும்?என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ஒருவேளை தமிழுக்கு சப்போர்ட் செய்வதால் கார்த்திக்-  கோதை அம்மாவுக்கு  இடையில் சண்டை வர வாய்பு உள்ளது.,இதை வைத்து மீண்டும் சந்திரகலா குடும்பத்தை பிரிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி