முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கோதையிடம் வசமாக மாட்டிய சந்திரகலா.. தமிழும் சரஸ்வதியும் சொன்ன உண்மை!

கோதையிடம் வசமாக மாட்டிய சந்திரகலா.. தமிழும் சரஸ்வதியும் சொன்ன உண்மை!

தமிழும் சரஸ்வதியும்

தமிழும் சரஸ்வதியும்

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நமச்சு வைத்திருக்கும் வீடியோ ஆதாரம் கோதை அம்மாவிடம் சிக்கினால் சந்திரகலா நிலைமை ஐயோ பாவம் தான்.

  • Last Updated :

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லி சந்திரகலா பேசிய மொத்தத்தையும் ஃபோனில் வீடியோ எடுத்து வைத்து இருக்கிறார் தமிழ். இதை ஆதாரமாக காட்டி சந்திரகலாவையும் கீதாவையும் ஆட்டி வைக்கிறார் நமச்சு.

விஜய் டிவியில் தற்போது ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு அடுத்தப்படியாக குடும்பங்கள் கொண்டாடும் தொடராக மாறியுள்ளது தமிழும் சரஸ்வதியும். இதில் தமிழாக நடிக்கும் தீபக்கின் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம், தென்றல் சீரியலில் இருந்தே தீபக்குக்கு ஏகப்பட்ட சின்னத்திரை ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதே போல தான் ஆங்கர் நக்‌ஷத்ராவுக்கும். இவர்களின் கெமிஸ்ட்ரி ஆன் ஸ்கீரினில் சூப்பராக வொர்க்கவுட் ஆக, சீரியலும் ஹிட் அடித்து விட்டது.

வெற்றி - ராதா கல்யாணம் உறுதியானது! என்ன செய்ய போகிறார் அபி?

இதை தவிர இந்த சீரியலை பலரும் விரும்பி பார்க்க மற்றொரு காரணம், அண்ணியாரே காயத்ரி தான். இதில் சந்திரகலா என்ற வில்லி ரோலில் நடிக்கிறார். இவரின் நடிப்பு, தமிழுக்கும் சரஸ்வதிக்கும் இவர் கொடுக்கும் தொல்லைகள் ரசிகர்களை வெகுவாக கவர, பலரும் இந்த தொடரை விரும்பி பார்க்கின்றனர். தற்போது கதைப்படி, பல பிரச்சனைகளை கடந்து சரஸ்வதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதே போல், சரஸ்வதி கிச்சனுக்குள் சென்று சமைக்க போகிறார்.

பாக்கியா வீட்டுக்கு வரும் ராதிகா... கோபி மாட்டபோகும் நேரமா இது?

இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என சந்திரகலா ஏகப்பட்ட பிளான்களை போட்டார். எல்லாமே ஃபைலியர் ஆக, கடைசியில் நமச்சு சாமியார் வேஷம் போட்ட உண்மை மட்டும் அவர்களுக்கு ஆதாரத்துடன் சிக்கிக் கொண்டது. சாட்சி சொல்ல, அந்த நபரை அழைத்துக் கொண்டு சந்திரகலாவின் மகன் கோதை அம்மா வீட்டுக்கு வருகிறார். ஆனால் அதற்குள் நம்ச்சு மற்றொரு ஆதாரத்தை காட்டி அவர்களை வாயடைக்க செய்கிறார். சரஸ்வதிக்கு தூக்க மாத்திரை கொடுத்த விஷயம் பற்றி சந்திரகலா தனது வாயால் வாக்குமூலம் கொடுத்த வீடியோ தான் அது. இதை பார்த்து எதுவும் பேச முடியாமல் சந்திரகலா நிற்க, நிகழ்ச்சி சுபமாக நடந்து முடிகிறது.

' isDesktop="true" id="744351" youtubeid="p7eAXJs16_o" category="television">

இந்நிலையில் இன்றைய எபிசோடில், காரில் சந்திரகலாவும் கீதாவும் செல்லும் போது கோதை அம்மா வீட்டு பணிப்பெண் சாந்தியை கீதா பார்த்து விடுகிறார். அவரை தேடி அலைகின்றனர். ஆனால் அதற்கு அவர் காணாமல் போகிறார். சரஸ்வதியை எப்படியாவது வீட்டில் இருந்து துரத்த அடுத்த பிளானை போடுகிறார் சந்திரகலா. ஆனால் நமச்சு வைத்திருக்கும் வீடியோ ஆதாரம் கோதை அம்மாவிடம் சிக்கினால் சந்திரகலா நிலைமை ஐயோ பாவம் தான்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: TV Serial, Vijay tv