Home /News /entertainment /

உண்மையை கண்டுப்பிடித்த சந்திரகலா.. மிகப் பெரிய அதிர்ச்சியில் தமிழ் - சரஸ்வதி!

உண்மையை கண்டுப்பிடித்த சந்திரகலா.. மிகப் பெரிய அதிர்ச்சியில் தமிழ் - சரஸ்வதி!

தமிழும் சரஸ்வதியும்

தமிழும் சரஸ்வதியும்

தமிழும் சரஸ்வதியும் ஆஸ்பிட்டலில் இருக்கும் சந்திரகலாவை பார்க்க செல்கின்றனர்.

    தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஆஸ்பிட்டலில் படுத்துக் கொண்டிருக்கும் சந்திரகலா அதற்கான காரணம் சரஸ்வதியும் தமிழும் தான் என கண்டுப்பிடிக்கிறார். ஆனால் இந்த விஷயத்தை செய்தது தமிழின் நண்பர் நமச்சி.

    விஜய் டி.வி-யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதில் விஜய் டிவி தீபக் தமிழ் கேரக்டரிலும், சரஸ்வதி கேரக்டரில் பிரபல டிவி தொகுப்பாளரும், சீரியல் நடிகையுமான நக்ஷத்ரா நாகேஷும் நடித்து வருகின்றனர்.இவர்களின் கெமிஸ்ட்ரி ஆன் ஸ்கீரினில் வொர்க்கவுட் ஆக , சீரியல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வழக்கமான சீரியல்கள் கதை, பாணியில் செல்லாமல் தமிழும் சரஸ்வதியும் சீரியல் புது ரூட்டில் செல்வது தான் இந்த சீரியலின் பிளஸ்.

    தமிழ் திரையை அலங்கரித்த நடிப்பின் ஓவியர் சிவக்குமார்!

    படித்த வாத்தியார் குடும்பத்தில் படிக்காமல் இருக்கும் ஹீரோயின், அவரை காதலிக்கும் பெரிய இடத்து பையன். படித்த பெண்னை தான் மருமகளாக பெறுவேன் என சபதம் விட்ட கோதை அம்மா. கோதை அம்மா குடும்பத்தை பிரிக்க நினைக்கும் வில்லி. இப்படித்தான் திரைக்கதை பயணித்துக் கொண்டிருந்தது. சரஸ்வதியுடன் தமிழுக்கு திருமணம் நடந்த பின்னர் தான் அவள் படிக்காதவள் என்ற விஷயம் தமிழ் குடும்பத்தினருக்கு தெரிய வருகிறது. இதனால் அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள். இதனை பயன்படுத்திக் கொள்ளும் வில்லி சந்திரகலா, குடும்பத்தை பிரிக்க நினைக்கிறார்.

    இதற்கிடையே ஒரே வீட்டில் இருந்தாலும் தமிழையும், சரஸ்வதியையும் குடும்பத்தினர் ஒதுக்கி வைத்திருப்பது சரஸ்வதியின் பாட்டிக்கு தெரிய வருகிறது. அதுமட்டுமில்லை சர்ஸ்வதியை கிச்சனில் விட கூடாது என்ற முடிவில் கோதை உறுதியாக இருக்கிறார். சரஸ்வதியும் எப்படியாவது கிச்சனுக்குள் செல்ல வேண்டும் என ஏதேதோ செய்து பார்த்தார் ஆனால் கடைசி வரை அது நடக்கவே இல்லை. இந்த நேரத்தில் தான் சரஸ்வதியின் பாட்டி, உள்ளே நுழைந்து கோதை அம்மாவுக்கு பாடம் கற்றுத்தர நினைக்கிறார்.

    ஏற்கெனவே வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த சாந்தி, அவசரமாக ஊருக்கு சென்றுவிட்டார். கோதை அம்மாவும் சமைக்க கூடாது என டாக்டர் சொல்லிவிட்டார். இதனால் அவர், இனிமேல் வசு தான் சமைக்க வேண்டும் என ஆர்டர் போட்டுவிடுகிறார். வசுவையும் சமைக்க விடாமல் செய்ய, நமச்சி பிளான் போடுகிறார். அதன்படி வசு அம்மா சந்திரகலாவுக்கும் தமிழின் அத்தைக்கும் இளநீரில் மாத்திரையை கலந்து கொடுத்து விடுகிறார். இதனால் அவர்கள் ஆஸ்பிட்டலில் இருக்கின்றனர். அவருக்கு துணையாக வசுவும் சமையலை விட்டு அங்கே போய் விட்டார்.

    ஒரு எபிசோடுக்கு 2 லட்சமா? சூப்பர் சிங்கர் பிரியங்கா பற்றி தீயாய் பரவும் தகவல்!

    இந்நிலையில் இன்றைய எபிசோடில் வீட்டில் யாருமே இல்லை, நான் சமைக்கிறேன் என மறுபடியும் சரஸ்வதி வந்து கெஞ்சுகிறார். ஆனால் கோதை பிடிவாதமாக அவரின் மகள் ரேவதியை சமைக்க சொல்கிறார். இந்த வருத்தத்தில் இருக்கும் தமிழும் சரஸ்வதியும் ஆஸ்பிட்டலில் இருக்கும் சந்திரகலாவை பார்க்க செல்கின்றனர். ஆனால் சந்திரகலா இவ்வளவு பிரச்சனைக்கும் நீங்கள் காரணம் என கோப்படுகிறார். அதெ நேரம் வசு தமிழுக்கும் சரஸ்வதிக்கும் ஆறுதலாக அவர்களுடன் நிற்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி