ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெப் சீரிஸ் பிரியர்கள் கவனத்திற்கு.. டான்ஸ் பற்றி பேசும் 5678 வெப் தொடர்!

வெப் சீரிஸ் பிரியர்கள் கவனத்திற்கு.. டான்ஸ் பற்றி பேசும் 5678 வெப் தொடர்!

5678 வெப் தொடர்

5678 வெப் தொடர்

விலங்கு, பேப்பர் ராக்கெட் வரிசையில் மற்றொரு தமிழ் ஒரிஜினல் வெப் தொடர் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடனத்தை மையமாக கொண்ட 5678 ஒரிஜினல் வெப் தொடர் ஜீ5 தளத்தில் வெளியாகிறது. இதுக் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

  இந்தியாவின் மிகப்பெரிய ஹோம் க்ரோன் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் பன்மொழி கதைசொல்லி தளமான ZEE5, அவர்களின் சமீபத்திய தமிழ் அசல் தொடரான - 5678 இன் வெளியீட்டை இன்று அறிவித்தது. விலங்கு, பேப்பர் ராக்கெட் வரிசையில் மற்றொரு கதையோடு இப்போது மீண்டும் களத்தில் குதித்துள்ளது. இந்த தமிழ் ஒரிஜினல் வெப் தொடர் 18 நவம்பர் 2022 அன்று இதன் தளத்தில் திரையிடப்படுகிறது.

  விஜய், பிரசன்னா ஜேகே, மிருதுளா ஸ்ரீதரன் ஆகியோரின் இயக்கத்தில் ஏ.எல்.அழகப்பன் ஹிதேஷ் தாக்கூர் தயாரிப்பில் உருவான இந்தத் தொடர் செம்பா, விக்ரம், தினேஷ் மற்றும் ஸ்வேதா என்ற இளமையான மற்றும் திறமைமை மிக்க இளைஞர்களின் வாழ்க்கைப் பயணத்தை முன்னிறுத்தி எடுத்துக்காட்டுகிறது. சமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்து ஆனால் அடக்கமான பின்னணியில் இருந்து வரும் இந்த தனிநபர்கள் நடனத்தின் மீது தீராத காதல் கொண்டிருக்கிறார்கள், ஆனால் எந்த தொழில் ரீதியாக எந்த ஒரு பயிற்சி பெறுவதற்கான பின்னணியும் இவர்களுக்கு இல்லை. வசதி படைத்த சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் தங்கள் திறமைகளை கூர்தீட்டி முன்னேறிச்செல்வதைக் காணும், இந்த இளம் கலைஞர்கள், அனைத்து சவால்களையும் போராடி முறியடித்து தங்கள் கனவுகளை எட்டி அடைய முடிவு செய்கிறார்கள். அதே வசதி படைத்த பல்முனை வளாகத்தை சேர்ந்த புதிய உறுப்பினர் கேசவ் என்பவருடன் இணைந்த பிறகு அவர்களின் கனவுகளுக்கு புதுச் சிறகுகள் முளைக்கத் தொடங்குகிறது.

  வீட்டிற்குள் பார் செட்டப்.. பிரமிக்க வைக்கும் சீரியல் நடிகையின் பிரம்மாண்ட வீடு!

  ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறினார், “ஆர்வத்தைத் தூண்டும் மற்றும் தாக்கத்தை விளைவிக்கக் கூடிய கதைகளை விவரிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த திறமையான கதைசொல்லிகளுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ZEE5 இல் விலங்கு, ஃபிங்கர் டிப் 2, ஆனந்தம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு, நேர்மறையான வரவேற்பை பெருமளவு பெற்ற நாங்கள், 5678 வெற்றிகரமான வெளியிடப்படுவதையும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம். இந்த தொடர் முரண்பாடுகளுக்கு எதிராக போராடி வெற்றி கொள்ளும் உறுதிப்பாடு மற்றும் அதீத வேட்கையை விவரித்து கூறி பறைசாற்றும் ஒரு சக்தி வாய்ந்த கதைக்களத்தைக் கொண்டது. திறமை மிக்க மற்றும் ஆர்வம் மிகுந்த படைப்பாளிகள் மற்றும் நடிகர்களின் குழுவைக் கொண்ட இந்தத் தொடர் பார்வையாளர்களின் மனதில் எளிதாக இடம்பிடித்துவிடும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.”

  கல்யாணத்திற்கு பிறகு ஒரே தத்துவம் தான்.. ஆடி காருடன் அசால்ட் செய்யும் மகாலட்சுமி!

  5678 குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் விஜய் கூறினார், “இளமை நிறைந்த மற்றும் திறமைமிக்க நடிகர்களுடன் இணைந்து 5678 இல் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் தொடரின் படப்பிடிப்பின் போது சுதந்திர மனப்பான்மை கொண்ட இந்த இளைஞர்கள் நிறைந்த உத்வேகத்துடன் மிகக்கடுமையான உழைப்பை வழங்கினர் . இப்போது இந்த நிகழ்ச்சி ZEE5 இல் வெளியிடப்படுவதன் மூலம் இந்த கேளிக்கையான மற்றும் மனதுக்கு இதமான இந்தத் தொடர் உலகெங்கிலும் உள்ள 190+ நாடுகளின் பார்வையாளர்களை சென்றடைந்து அவர்களின் உள்ளத்தில் இடம் பிடிக்கப் போகிறது இந்தத் தொடரை பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்டு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறோம்” என கூறியுள்ளார்.

  strong>Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: TV series, Zee tamil, Zee Tamil Tv