கடந்த வார டிஆர்பி-யில் முதலிடம் பிடித்த சீரியல் இதுதான்.. பின்னுக்கு தள்ளப்பட்ட சன் டிவி சீரியல்கள்!

பாரதி கண்ணம்மா சீரியல்

சன் டிவி, விஜய் டிவி சீரியல்கள் தான் மாறி மாறி டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 5 இடத்தை பிடித்து வருகின்றன.

 • Share this:
  டிஆர்பி-யை வைத்துதான் ஒரு தொலைக்காட்சியின் சீரியல்கள் மக்களிடையே எந்த அளவுக்கு பிரபலமடைந்துள்ளது என்பது தெரியும். தங்களது சீரியலின் டிஆர்பி-யை உயர்த்துவதற்காக போட்டிபோட்டுக் கொண்டு ஒவ்வொரு தொலைக்காட்சி தொடரும் சீரியலின் சுவாரஸ்யத்தை அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில், சன் டிவி, விஜய் டிவி சீரியல்கள் தான் மாறி மாறி டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 5 இடத்தை பிடித்து வருகின்றன.

  அதேபோல, ஒவ்வொரு வாரமும் சன் டிவி அல்லது விஜய் டிவி சீரியல்கள் முதலிடத்தை பிடித்து வருகின்றன. மேலும் டிஆர்பி ரேட்டிங்கை வைத்தே ஒவ்வொரு சீரியலின் நேரமும் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு சீரியலுக்கு எதிர்பார்த்த அளவில் ரெஸ்பான்ஸ் இல்லை என்றால் அந்த சீரியல் மதிய நேரத்தில் ஒளிபரப்பப்படும். அல்லது மாலை 6 மணி முதல் 7 மணி நேரத்திற்குள் ஒளிபரப்படும். அதுவே, ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கும் சீரியல் 7 மணியில் இருந்து 10 மணி வரை ஒளிபரப்பப்படும். ஏனெனில், அந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் இருப்பதால் சீரியலை மிஸ் பண்ணாம பார்ப்பார்கள்.

  Also Read : பாரதி கண்ணம்மா vs நாம் இருவர் நமக்கு இருவர்... மிகப் பெரிய எதிர்பார்ப்பில் சீரியல் ரசிகர்கள்!

  மேலும், சன் டிவி சீரியல்கள் தான் இல்லத்தரசிகளின் தினசரி பார்க்கும் நாடகமாக இருந்து வந்தது. இந்த நிலையில், சன் டிவி-க்கு டஃப் கொடுக்கும் வகையில் விஜய் டிவியில் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. மேலும், வாரம்தோறும் சீரியல்கள் தொடர்பான டிஆர்பி ரேட்டிங்கும் வெளியாவது வழக்கம். அதில் அதிகம் ரசிகர்களால் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

  அதன்படி, கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி முதல் ஆகஸ்ட் 20 தேதி காலகட்டத்திற்கான டிஆர்பி விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் வழக்கம்போல சன் டிவி தான் ஒட்டுமொத்த டிஆர்பியில் முதலிடம் பிடித்து இருக்கிறது. ஆனால் சீரியல் வரிசை லிஸ்டில் விஜய் டிவியின் சீரியல் தான் முதலிடம் பிடித்துள்ளது. அது வேறு எந்த சீரியலும் இல்லை... இளசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பாரதி கண்ணம்மா தொடர் தான் முதலிடத்தில் உள்ளது.

  இதையடுத்து சன் டியின் ரோஜா சீரியல் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. டிஆர்பி ரேட்டிங்கில் பாரதி கண்ணம்மாவுக்கு 10.4 புள்ளிகள் கிடைக்க, ரோஜாவுக்கு 10.25 புள்ளிகள் தான் கிடைத்து இருக்கிறது. ஆனால், முதல் 10 இடங்களில் சன் டிவி-யின் பெரும்பாலான சீரியல்கள் இடம்பெற்று மொத்த டிஆர்பி-யில் முன்னிலை வகித்துள்ளது. மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் மூன்றாம் இடத்திலும், நான்காம் இடத்தில் கண்ணான கண்ணே சீரியலும் இருக்கின்றன. ஐந்தாம் இடத்தில் பாக்கியலட்சுமி சீரியல் இருக்கிறது.

  டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 10 இடத்தில் உள்ள சீரியல்களின் முழு லிஸ்ட் பின்வருமாறு:

  1) பாரதி கண்ணம்மா (விஜய் டிவி) - 10.4
  2) ரோஜா (சன் டிவி) - 10.25
  3) பாண்டியன் ஸ்டோர்ஸ் (விஜய் டிவி) - 9.46
  4) கண்ணான கண்ணே (சன் டிவி) - 9.11
  5) பாக்கியலட்சுமி (விஜய் டிவி) - 9.07
  6) பூவே உனக்காக (சன் டிவி) - 9.06
  7) வானத்தை போல (சன் டிவி) - 8.89
  8) ராஜா ராணி (விஜய் டிவி) - 8.79
  9) சுந்தரி (சன் டிவி) - 8.02
  10) அன்பே வா (சன் டிவி) - 7.81

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: