Home /News /entertainment /

சவுந்தர்யாவின் மெகா திட்டத்தால் சூடுப்பிடிக்கும் பாரதி கண்ணம்மா

சவுந்தர்யாவின் மெகா திட்டத்தால் சூடுப்பிடிக்கும் பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா தொடரில் அடுத்து வரும் எபிசோடுகள் ரசிகர்களை கண்டிப்பாக கவரும் என்பதை உறுதிபடுத்தும் புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
    பாரதி கண்ணம்மா தொடருக்கு ஒருபக்கம் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும் இந்த சீரியலை பங்கமாக விமர்சிக்காத இணையவாசிகளே இல்லை எனலாம். ஒரு டி.என்.ஏ டெட்ஸ் எடுத்தால் முடிய வேண்டிய சீரியலை 3 ஆண்டுகளாக ஒளிப்பரப்பி அதில் வெற்றியும் கண்டு வருகிறார் இயக்குனர் பிரவீன். டாக்டர் பாரதி முட்டாளம் தனமாக நடந்து கொள்வது ஒரு விமர்சனம் என்றால் கண்ணம்மா 1 வாரமாக கையில் பேக்குடன் நடந்தே எபிசோட்டை ஓட்டியது இன்னொரு அபத்தம். ஆனாலும் கூட இந்த சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பியில் முதலிடத்தில் இருந்து வந்தது.

    கண்ணம்மாவை தங்கள் வீட்டு பெண்ணாக இல்லத்தரசிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். இவ்வளவு பேரும், புகழும் இருக்கும் நேரத்தில் தான் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி சீரியலை விட்டு விலகி விட்டார். அவர் போன முதல் வாரமே சீரியல் மிகப் பெரிய அடி வாங்கியது., பலரும் அந்த நேரத்தில் சன் டிவி சீரியல் மீதும் கவனத்தை திருப்பினர். இந்நிலையில் புது கண்ணம்மாவாக வினுஷாவை சீரியல் குழு தற்போது அறிமுகப்படுத்தியது. எல்லோரும் எதிர்ப்பார்த்தது போலவே வினுஷாவுக்கு ஏகப்பட்ட எதிர்ம்றை விமர்சனங்கள் கிடைத்துள்ளன. ஆனாலும் அவரை கூடிய விரைவில் மக்கள் ஏற்று கொள்வார்கள் என இயக்குனர் நம்புகிறார்.

    அதனால் கதையில் பல திருப்பங்களை கொண்டு வந்துள்ளார். கோர்ட் உத்தரவின் படி அடுத்த 6 மாதத்திற்கு பாரதியும் - கண்ணம்மாவும் சேர்ந்து வாழ போகிறார்கள். இதனால் பாரதி கண்ணம்மா வீட்டுக்கு பொட்டி படுக்கையுடன் 6 மாதத்துக்கு டெண்ட் போட வந்துள்ளார். இதுக் குறித்த புரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.

    இந்த புரமோவில் சவுந்தர்யா ஒரு மெகா திட்டத்தை போட்டு, லட்சுமியை தங்களுடைய வீட்டுக்கு அழைத்து செல்கிறார். பாரதியும் கண்ணம்மாவும் தனியாக நேரத்தை செலவழிக்க வேண்டும் என்பது அவரின் திட்டம். ஆனால் கண்ணம்மா வீட்டுக்கு செல்லும் பாரதி, 6 மாதம் இல்லை 6 நாளில் இந்த பிரச்சனைக்கு தீர்வு கட்டுகிறேன் என்று வீர வசனம் பேசுகிறார். இவ்ர்களின் டாம் & ஜெர்ரி விளையாட்டு தான் சீரியலில் அடுத்து வர போகும் எபிசோடுகள். ஆறு நாள் என்றாலே இவர்கள் 6 மாச எபிசோடை ஓட்டுவார்கள் 6 மாசம் என்றால் 6 வருஷம் ஆகும் போல. மொத்தத்தில் இப்போதைக்கு பாரதி கண்ணம்மா சீரியல் முடியாது என்பது கன்ஃபாம் ஆகிவிட்டது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி