• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • என்னது! பாரதிக்கு கத்தி குத்தா? அதுக்கும் கண்ணம்மா தான் காரணமா?

என்னது! பாரதிக்கு கத்தி குத்தா? அதுக்கும் கண்ணம்மா தான் காரணமா?

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

நடத்தை பற்றி பாரதி பேசுவதால் கோபத்தில் கட்டுப்பாட்டை இழந்த கண்ணம்மா, கத்தியை எடுத்து பாரதியை குத்துக்கிறார்.

  • Share this:
    பாரதியை கோர்டில் வைத்தப்படி கண்ணம்மா கத்தியால் குத்துவது போல் பாரதி கண்ணம்மா புரமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியல் விறுவிறுப்பான திருப்பங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், பாரதியும் கண்ணம்மாவும் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில தற்போது பாரதி, கண்ணம்மாவிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளார். சீரியலில் தற்போது கோர்டு சீன்கள் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் முதல் ,சீரியலில் புது கண்ணம்மாவை காட்டத் தொடங்கிவிட்டனர். புது கண்ணம்மாவாக நடிக்க தேர்வு ஆகியிருக்கும் வினுஷா தற்போது தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

    கதைப்படி பாரதி ஒரு டீ.என்.ஏ டெஸ்ட் எடுத்து இருந்தால் சீரியல் எப்போதோ முடிவுக்கு வந்து இருக்கும். ஆனால் அதை நடக்க விடாமல் தொடர்ந்து வில்லி வெண்பா சதி செய்து வருகிறார். இப்போது வெண்பா ஜெயிலில் இருக்கிறார். இந்த நேரத்தில் கோர்டு உத்தரவு படி பாரதி டெஸ்ட் எடுத்தால் கூட உண்மை தெரிந்து விடும் போல. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லாதது போல் மற்றொரு புரமோ வெளியாகியுள்ளது.

    சட்டப்படி கண்ணம்மாவை பிரிய பாரதி முடிவு எடுத்துவிட்டார். அதற்கு காரணம், ஹேமாவை தன்னிடம் இருந்து கண்ணம்மா பிரிப்பதாக குற்றம்சாட்டி இருந்தார் பாரதி. ஆனால் நீதிமன்றம் பாரதியின் காரணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. சரியான காரணமாக தெரியவில்லை என சுட்டி காட்டுகிறது. இந்த நேரத்தில் தான் சவுந்தர்யா, வேணு, கண்ணம்மாவின் அப்பா பயந்தது போல குழந்தை விஷயத்தை பற்றியும், கண்ணம்மா தன்னை ஏமாற்றி விட்டதாக பாரதி கோர்டில் போட்டு உடைகிறார். நடத்தை பற்றி பாரதி பேசுவதால் கோபத்தில் கட்டுப்பாட்டை இழந்த கண்ணம்மா, கத்தியை எடுத்து பாரதியை குத்துக்கிறார்.



    ஒட்டு மொத்த கோர்டும் அதிர்ச்சியில் நிற்கிறது. இந்த புரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் இது உண்மையில்லை கனவு என்றும் ரசிகர்கள் உறுதியாக கூறியுள்ளனர். புதிய கண்ணம்மாவான வினுஷாவின் நடிப்பை இந்த கோர்டு சீன்களில் தெரிந்து கொள்ளலாம். அறிமுகத்திலே வினுஷா ரசிகர்களுடன் கண்ணம்மா பாத்திரத்தில் பதிய வேண்டும் என்பதற்காக இந்த கோர்டு சீன்களை இயக்குனர் அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுத்து வருகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: