கேரளாவில் தனி வீடு.. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் விஜய் டிவி சீரியல் இதுதான்!

விஜய் டிவி சீரியல்

இந்த சீரியல் சுமார் 800 எபிசோடுகளைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

 • Share this:
  விஜய் தொலைக்காட்சியில் அதிக பட்ஜெட்டில் ஒளிபரப்பாகும் சீரியலில் எது என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

  பட்ஜெட்டில் பிரம்மாண்ட திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது சீரியல்களும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படுவது லேட்டஸ்ட் டிரெண்டாக உள்ளது. சன் டீவி முதல் விஜய் டிவி வரை சுவாரஸ்யமான மற்றும் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற சீரியல்களுக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கப்பட்டு, பிரம்மாண்டமாக தயாரிக்கப்படுகின்றன. அந்தவகையில் விஜய் டீவியில் ஒளிபரப்பான மௌனராகம் சீரியல் மெகா ஹிட்டானது. சிறுவர்களைப் மையப்படுத்தி உருவான இந்த சீரியல் சுமார் 800 எபிசோடுகளைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

  கொரோனா வைரஸ் முதல் அலையின்போது அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக இடையே நிறுத்தப்பட்ட சீரியல், பின்னர் திடீரென நிறுத்தப்பட்டது. இது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்த நிலையில், உடனடியாக மௌனராகம் 2 சீரியல் தயாரானது. தற்போது ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் 2வது பாகம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்படுகிறது. கேரளாவில் பிரத்யேகமாக வீடு ஒன்று வாடகைக்கு எடுக்கப்பட்டு சூட்டிங் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக, நடிகர், நடிகைகள் உள்ளிட்ட அனைவரும் தங்குவதற்கான சிறப்பான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  முதல் பாகத்துக்கு இருந்த வரவேற்பைப் போலவே 2வது பாகத்துக்கும் மக்களிடையே வரவேற்பு உள்ளது. இதுவரை 100 எபிசோடுகளைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வரும் சீரியல் என்ற சிறப்பையும் மௌனராகம் பெற்றுள்ளது. இந்த சீரியலில் சக்தி, வேலன் கதாப்பாத்திரங்களில் கிருத்திகா நடிக்கிறார். ஷெரின், ஷமிதா ஸ்ரீகுமார், ராஜீவ் பரமேஷ்வர், சிப்பி ரஞ்சித் போன்ற பலர் நடித்துள்ளார்கள். மற்றும் பிரபல இசை அமைப்பாளர் எம். ஜெயச்சந்திரன் இந்தத் தொடருக்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.

  மௌன ராகம்


  தாய் செல்வம் தொடரை இயக்குகிறார். பரபரப்பான கதைக்களத்துடன் தொடர் சென்று கொண்டிருக்கிறது. முதல் அலை கொரோனா பாதிப்பு மௌன ராகம் சீரியலின் முதல் பாகத்தின் சூட்டிங்கை பாதித்ததுபோல், 2 வது அலை கொரோனாவும் 2வது பாகத்தின் சூட்டிங்கிற்கு பாதகத்தை ஏற்படுத்தியது. இதனால், சிறிது காலம் மௌனராகம் சீரியல் ஒளிபரப்பாகவில்லை. அந்த நேரத்தில் பாவம் கணேசன் சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டதால், ஒருவேளை மௌனராகம் சீரியல் நிறுத்தப்பட்டுவிட்டதோ? என ரசிகர்கள் சந்தேகப்படத் தொடங்கினர்.

  இது குறித்து படக்குழுவும் எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தது. தொடர்ந்து இதுபோன்ற செய்திகள் பரவிக்கொண்டு இருந்த நிலையில், தங்களிடம் ஒளிபரப்புவதற்கான ஸ்டாண்ட் பை காட்சிகள் இல்லாததால், தற்காலிகமாக சீரியல் நிறுத்தப்பட்டுள்ளது, விரைவில் உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சீரியலின் படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு அறிவித்தது. அதன்படி, தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: