சந்தியாவை வீட்டை விட்டு அனுப்ப முடிவு எடுக்கும் சரவணன்.. பார்வதி நிச்சயதார்த்தம் வரைக்கும் தான் டைம்!

ராஜா ராணி 2 சீரியல்

சந்தியாவோ ஒரு பக்கம் சரவணனுடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் என நினைக்கிறார்

 • Share this:
  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி சீரியலில் சந்தியாவை வீட்டை விட்டு அனுப்ப சரவணன் முடிவு எடுத்துவிட்டான். அந்த முடிவை தனது அப்பாவிடமும் கூறிவிட்டான்.

  ராஜா ராணி சீரியல் நாளுக்கு நாள் விருவிருப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.ஆரம்பத்தில் இந்த சீரியல் மீது ரசிகர்களுக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை. ஆனால் ஆல்யாவின் நடிப்பு, சந்தியாவாக சீக்கிரமாக இல்லத்தரசிகளின் இதயத்தில் இடம் பிடித்தார். அதன் பின்பு மாமியாரான சிவகாமி நடிப்பு , அர்ச்சனாவின் சதி என சீரியலுக்குள் ரசிகர்கள் தீவிரமாகி இப்போது டாப் வரிசையில் பீக் டைமில் ராஜா ராணி சீரியல் சென்றுக் கொண்டிருக்கிறது.

  கதைப்படி சந்தியா, சரவணனை முழுமனசாக ஏற்றுக் கொண்டார். ஆனால் சரவணன் சந்தியாவின் கனவுக்காக அவளை விட்டு பிரிய முடிவு எடுத்துவிட்டான். இதை மனதில் வைத்துக்கொண்டு தான் சந்தியாவை தினமும் வெறுப்பது போல் நடித்து வருகிறான். ஆனால் சந்தியாவோ ஒரு பக்கம் சரவணனுடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் என நினைக்கிறார். அதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வீண் போகிறது. ஆனால் இது தெரியாமல் மாமியார் சிவகாமி சந்தியாவை தினம் தினம் திட்டுக் கொண்டிருக்கிறார். இப்போது பார்வதி, சந்தியா அண்ணியை நம்பி அவரிடம் இதுவரை நடந்தவைக்கு மன்னிப்பும் கேட்டு விட்டார், ஆனால் சரவணனோ சந்தியாவை எப்படியாவது வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்திலே இருக்கிறார்.
  இந்த உண்மையை தனது அப்பாவிடம் சரவணன் கூறுவது புரமோவாக வெளியாகியுள்ளது. ஒருபக்கம் சரவணனுடன் சேர வேண்டும் என சந்தியா கனவு காண, இந்த பக்கம் சந்தியாவை பிரிய போகும் காரணத்தையும் அதற்காக தான் நடிப்பதாக எல்லா உண்மைகளையும் அவரின் அப்பாவிடம் சரவணன் சொல்லி, அதை யாரிடமும் சொல்ல கூடாது என சத்தியமும் வாங்குகிறான்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பாவம் சந்தியா. பார்வதி நிச்சயதார்த்தம் ஏறக்குறைய முடிவாகிவிட்ட நிலையில் சந்தியாவை நிச்சயதார்த்தம் முடிந்த உடனே அனுப்பிட வேண்டும் என்ற முடிவில் சரவணன் உறுதியாக இருக்கிறான். இனி நடக்க போவது சரவணன் கையில் தான் உள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்


  Published by:Sreeja Sreeja
  First published: